குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே 64 படத்தை இயக்க உள்ளார். நடிகர் அஜீத்குமார் இப்போது வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருப்பதால் வருகிற நவம்பர் மாதம் ஏகே 64 படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான் ஏகே 64 படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
நடிகர் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க 186 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். இதற்கு முன்பு அவர் வாங்கிய சம்பளத்தை விட இப்போது மிக அதிகமாக கேட்பதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 350 கோடி ரூபாய் என்பதால் அஜீத்குமார் சம்பளத்தை குறைக்குமாறு ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்த பல தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன.
ஆனால் சம்பள விஷயத்தில் நடிகர் அஜீத்குமார் கறாராக இருந்ததால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சன் பிக்சர்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் லைகா புரடக்சன்ஸ் வேல்ஸ் பிலிம் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏகே 64 படத்தை தயாரிக்காமல் பின்வாங்கி விட்டன. இந்த சூழலில்தான் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார். வடமாநிலத்தை சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவர் இந்த படத்துக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜீத்குமார் நடிக்கும் 64வது படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் ஜெயிலர் கமலுடன் உன்னைப் போல் ஒருவன் விஜயுடன் ஜில்லா பிரபுவுடன் சிறைச்சாலை உள்ளிட்ட தமிழ் படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
இப்போது அவருக்கு மத்திய அரசு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதே சாகிப் பால்கே விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர் நடிகர் அஜீத்குமாரின் படத்தில் இணைய இருப்பது உறுதியாகி விட்டது. இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் நடிகர் மோகன்லாலிடம் பேசி சம்மதம் பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த படத்தில் நடிக்க இப்போதைக்கு முடியாது. அடுத்த ஆண்டில் மார்ச் மாதத்துக்கு பிறகுதான் கால்ஷீட் ஒதுக்க முடியும் என்று மோகன்லால் திட்டவட்டமாக கூறிவிட்டார். அந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் அஜீத்குமாருடன் இணைந்து நடிக்க தயாா் என்றும் கூறியிருக்கிறார். அதற்கேற்ப இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஷெட்யூல்களை திட்டமிட்டு வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாகவும் நடிகர் மோகன்லால் நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.





