நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே பாலாஜி இயக்கத்தில் நடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி ஜர்னலிஸ்ட் கேரக்டரில் நடித்திருந்தார்.
போலி சாமியாருக்கும் நிஜ அம்மனுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம். கடவுள் பேரை சொல்லி மக்களை ஏமாற்றம் போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் காட்சிகளை இதில் ஆர்ஜே பாலாஜி காட்டியிருந்தார். இதில் பல ஆயிரம் நிலத்தை அபகரிக்கும் போலி சாமியாரிடம் இருந்து அந்த நிலத்தை மீட்டு போலி சாமியாரை மக்களே விரட்டுவதே கதையாக இருந்தது.
இந்த படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இப்போது மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்து வருகிறார். ஆனால் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கவில்லை. அவருக்கு பதிலாக இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்து வருகிறார்.
இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி மேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மூக்குத்தி அம்மன் முதல் பாகம் போல் குறைந்த பட்ஜெட் இல்லாமல் 2ம் பாகத்தை மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மொத்த பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா பூஜை கடந்த மார்ச் மாதம் துவங்கியது. தொடர்ந்து 5 மாதங்களாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று காலை வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா சோகமான முகத்துடன் அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று காட்சி உள்ளது. கையில் திரிசூலம் வேலுடன் அம்மனாக நயன்தாரா அமர்ந்திருக்கிறார். ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதற்கிடையே சுந்தர் சி இயக்கத்தில் முதன்முறையாக நடிகை நயன்தாரா நடித்திருப்பதால் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





