- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2… அந்த சென்டிமென்ட் இந்த படத்திலும்...

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2… அந்த சென்டிமென்ட் இந்த படத்திலும் தொடர்கிறதா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

இயக்குனர் சுந்தா் சி இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடித்திருந்தார். மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பக்தி பாடலுக்கு நடிகைகள் சிம்ரன் குஷ்பு சிறப்பு நடனம் ஆடியிருந்தனர்.

நடப்பாண்டில் கடந்த ஜனவரியில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மதகஜ ராஜா படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படம் வெளியானது. இதில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இப்போது மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்திலும் அவரே நாயகியாக அம்மனாக நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹிப் ஆப் ஆதி இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். சென்னை பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இப்போது சென்னையில் உள்ள ஈசிஆரில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் இப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிகைகள் நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

- Advertisement -

வழக்கமாக சுந்தர் சி இயக்கிய படங்களில் இதுபோன்ற திரில்லர் படங்களில் கிளைமாக்ஸில் பாட்ல காட்சி மிக பிரமாண்டமாக இருக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழா போன்று காட்டப்படும். அதில் பலர் கூட்டமாக நடனமாடுவது போன்ற காட்சிகளும் வரும். அரண்மனை 4 படத்தில் கிளைமாக்ஸில் வந்த பாடலுக்கு நடிகைகள் சிம்ரன் குஷ்பு இருவரும் இணைந்து ஆவேச நடனமாடியிருந்தனர்.

அதனால் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் அதே போன்ற சென்டிமென்ட் தொடர்கிறதா, இந்த படத்திலும் குஷ்பு அல்லது மீனா போன்றவர்கள் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்து பாடல் காட்சியில் தோன்றி ஆடப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்