- Advertisement -
Homeபொழுதுபோக்குபடையப்பா படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு… 43 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸாகும் ரஜினியின் அந்த...

படையப்பா படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு… 43 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸாகும் ரஜினியின் அந்த விண்டேஜ் படம் – இது வேற லெவல் படமாச்சே?

- Advertisement -

கூலி படத்துக்கு பிறகு இப்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இன்னும் சில வாரங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அதன்பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட் ஆகியிருக்கிறார்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான இம்மாதம் 12ம் தேதி படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான படையப்பா படம் இதுவரை 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் இந்த படத்தை திரையில் பார்க்க முடியாத இன்றைய டீன் ஏஜ் வயதினரும் இந்த படத்தை இப்போது தியேட்டர்களில் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

- Advertisement -

கடந்த 1999ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட படையப்பா படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடிதான். இந்த படத்தை நடிகர் ரஜினியே சொந்தமாக தயாரித்தார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதியவரும் அவர்தான். அப்போதே படையப்பா படம் பல கோடி ரூபாய் லாபம் அடைந்தது. இப்போது ரி ரிலீஸ் செய்த நிலையிலும் இந்த படம் ரூ. 15 கோடி வரை வசூலை அள்ளியுள்ளது.

படையப்பா படம் ரி ரிலீஸ்க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மற்றும் வசூலை அடுத்து மீண்டும் ஒரு ரஜினிகாந்த் நடித்த பழைய படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் இந்த படம் வெளியாகி 43 ஆண்டுகளாகிறது. ரஜினியின் சினிமா பயணத்தில் இந்த படம் மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சத்யா மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் மூன்று முகம். கடந்த 1982ம் ஆண்டு வெளியான மூன்று முகம் படம்தான் அடுத்த 2026ம் ஆண்டில் ரி ரீலீஸ் செய்யப்படுகிறது. இதில் மீண்டும் விண்டேஜ் ரஜினியை திரையில் காண சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்த மூன்று முகம் படத்தில் ரஜினிகாந்த் அப்பா, 2 மகன்கள் என 3 வேடங்களில் நடித்திருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜோன் ஆகிய 3 மாறுபட்ட கேரக்டர்களில் அவரது நடிப்பு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்த படம் 250 நாட்கள் ஓடிய வெற்றிப் படமாகும். இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்த ரஜினிகாந்துக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது.

- Advertisement -

சற்று முன்