எப்போதுமே அடுத்தவர் பணத்தை செலவழிப்பது என்பது யாருக்குமே மனதுக்கு சிறிதும் சங்கடத்தை தருவதில்லை. அந்த வகையில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் சினிமா பட தயாரிப்பாளர்கள்தான். ஏனெனில் படத்தின் டிஸ்கஷன் முதல் இறுதி வரை எல்லாவித செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டி விடுவது இயக்குனர்கள், நடிகர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இதில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் துவங்குவதற்கு முன்பு ஸ்டோரி டிஸ்கஷன் எனப்படும் கதை விவாதத்தில் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்கள் கலந்து கொள்வார்கள். மாதக்கணக்கில் இந்த கதை விவாதம் என்பது நட்சத்திர ஹோட்டல்களில் நடப்பது வழக்கம்.
அப்படி நடக்கும் போது அவர்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்பதை விருந்து போல தான் சாப்பிடுவார்கள். விதவிதமான ஐட்டங்களை ஆர்டர் செய்து சாப்பிடுவது அவர்களது வழக்கமாக இருக்கும். அது மட்டும் இன்றி இரவு நேரங்களில் மதுபான வகைகளுடன் சாப்பிடுவதும் சில இயக்குனர்களின் வழக்கமாக இருக்கும். இப்படி அவர்கள் செய்யும் செலவுகளால் தயாரிப்பாளருக்கு இதுவே பல லட்சங்களில் செலவு ஏற்படும்.
ஸ்டோரி டிஸ்கஷன் என்பது இரண்டு, மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் பட்சத்தில், இந்த செலவு கோடிகளையும் தொட வாய்ப்புள்ளது. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு தண்ட செலவு வைப்பதில் சில இயக்குனர்கள் அதிக முனைப்பாக இருப்பார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற எந்தவித வருத்தமும் இருக்காது.
அந்த வகையில் இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர். ராஜா ராணி படம் மூலமாக இயக்குனரான அறிமுகமான அட்லி அடுத்து விஜய் நடிப்பில் தெறி, பிகில், மெர்சல் போன்ற வெற்றி படங்களை தந்தவர். இந்நிலையில் அட்லி காலை நேரத்தில் டிபன் சாப்பிடுவதற்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு வைப்பார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது நட்சத்திர ஓட்டலில் தங்கி கதை டிஸ்கசனில் ஈடுபடும்போது ஒருவேளை காலை நேர உணவுக்கு டிபன் செலவுக்கு ஒரு ஐந்தாயிரம் என தயாரிப்பாளருக்கு பில் வைப்பது அவரது வழக்கமாகும்.
ஆனால் டைரக்டர் வினோத் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் இயக்குவதற்காக, அவரது அலுவலகத்தில் மாதக்கணக்கில் இருந்தபோது ஒரு நாள் உணவு செலவாக மூன்று வேளையும் சேர்த்து 600 ரூபாய் மட்டுமே அவரது செலவாக பில் தந்துள்ளார். அதாவது ஒரு நாள் சாப்பாட்டுக்கு மூன்று வேளைக்கும் சேர்த்து 600 ரூபாய் என்பதுதான் அவரது உணவு செலவாக இருந்தது. இப்படி தயாரிப்பு நிறுவனத்திற்கு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளும் டைரக்டர் எச் வினோத் போன்றவர்கள் இருக்கும் அதே தமிழ் சினிமாவில்தான் காலை நேர டிபனுக்கு மட்டுமே ஐந்தாயிரம் ரூபாய் தயாரிப்பாளருக்கு செலவு வைக்கும் அட்லி போன்ற இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





