- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம்தான் மௌன ராகம் பார்ட் 2, ஆனால் இதில் மோகன் ஹீரோ இல்லை, 1980களிலேயே...

இந்த படம்தான் மௌன ராகம் பார்ட் 2, ஆனால் இதில் மோகன் ஹீரோ இல்லை, 1980களிலேயே வித்தியாசமாக யோசித்த மணிரத்னம்

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தாலும் இப்போதும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் திரைப்படம் “மௌன ராகம்”. இதில் மோகன், கார்த்திக், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். மணிரத்னம் கெரியரில் மட்டுமல்லாது மோகனின் கெரியரிலும் இது ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இதில் இடம்பெற்ற கார்த்திக்-ரேவதி ஆகியோரின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்போதும் தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை ஒளிபரப்பினால் ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.

- Advertisement -

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது மணிரத்னம் 1990 ஆம் ஆண்டு “மௌன ராகம் பார்ட் 2” திரைப்படத்தை இயக்குவதாக முடிவெடுத்திருந்தாராம். இதில் மோகனுக்கும் ரேவதிக்கும் குழந்தைகள் இருப்பது போலவும், அதில் ஒரு குழந்தைக்கு மன வளர்ச்சி பாதிக்கப்பட்டது போலவும் திரைக்கதை எழுதியிருந்தாராம்.

மோகனுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு சுரேந்தர் என்பவர் பின்னணி குரலாக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சுதாகருக்கும் மோகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மோகன் தனது சொந்த குரலிலேயே பேசி வந்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில்தான் “மௌன ராகம் பார்ட் 2” திரைப்படத்திற்காக மணிரத்னம் அவரை அணுகியிருக்கிறார். ஆனால் மோகனோ அத்திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம். அதன் பிறகுதான் மணிரத்னம், ரகுவரனை வைத்து ஒரு தனி திரைப்படமாக அத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அத்திரைப்படத்தின் பெயர்தான் “அஞ்சலி”. இவ்வாறு “மௌன ராகம் பார்ட் 2” ஆக உருவாக வேண்டிய திரைப்படம் மோகன் ஒப்புக்கொள்ளாததால் அதில் ரகுவரன் நடித்து “அஞ்சலி” திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்