- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு நடிகர் விஜயை பார்த்தா பரிதாபமா இருக்கு, அரசியல்ல யாருமே உண்மையா இருக்க முடியாது -...

எனக்கு நடிகர் விஜயை பார்த்தா பரிதாபமா இருக்கு, அரசியல்ல யாருமே உண்மையா இருக்க முடியாது – வேதனைப்பட்டு கருத்து தெரிவித்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் மிக முக்கியமானவராக இருக்கிறார். கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா, விஜயா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, ரஜினிக்கு நிகராக விஜய் என்ற ரீதியில் அவரது செல்வாக்கு குறித்த மதிப்பீடாக அது இருந்தது. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான் என்று அந்த சர்ச்சைக்கு விஜயே முற்றுப்புள்ளி வைத்தார்.

தமிழ் சினிமாவில், விஜய்க்கு என பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக டீன் ஏஜ் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர், குழந்தைகள் மட்டுமின்றி குடும்பத்துடன் அவர் நடித்த படங்களுக்கு வரும் ஆடியன்ஸ் மிக மிக அதிகம். அதனால் விஜயை பொருத்த வரை இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நீடித்திருக்கலாம்.

- Advertisement -

ஆனால் அவர் இப்போது நடித்துள்ள தி கோட் படம் வரை 68 படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்து தனது 69 படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்துள்ளார். எச் வினோத் இயக்கும் அந்த படத்துடன் தன் நடிப்பு வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார், திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் நிலையில், புது ரத்தம் பாய்ச்சும் விதமாக தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று வெளிப்படையாகவே மக்கள் கூறி வரும் நிலையில், விஜய் வந்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

அதே நேரத்தில் ஒரு சிலர், விஜய் தமிழ் சினிமாவில் நடிப்பில் முக்கிய இடத்தில் இருப்பதால், அதே துறையில் இருந்து இன்னும் சாதிக்கலாம். அதை விட்டுவிட்டு அரசியலுக்குள் வருவது, அவருக்கு ஒருவேளை பெருத்த ஏமாற்றத்தை தரலாம். வெளியில் இருந்து அரசியல் களத்தை பார்ப்பது வேறு, அரசியல் களத்துக்குள் நின்று பார்ப்பது வேறு என்று முன்னணி நடிகராக இருந்து இப்போது சமத்துவ மக்கள் கட்சி தலைவராக இருக்கிற சரத்குமார் போன்ற அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விஜயின் அரசியல் பயணம் குறித்து கூறுகையில், எனக்கு விஜயை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவருக்கு நிறைய புகழ் இருக்கிறது. பெரிய அளவில் நடித்து சம்பாதிக்கிறார். இப்படி இருக்கும்போது ரொம்பவும் ரிஸ்க் எடுத்து அரசியலில் இறங்கியுள்ளார். அரசியலில் யாராலும் உண்மையாக இருக்க முடியாது. கொஞ்சம் திருட்டுத்தனம் செய்யணும்ன்னு சொல்வார்கள். அரசியல் செட் ஆகாமல், திரும்பவும் 3 வருஷம் கழிச்சு, சினிமாவுக்கு வந்தால், ரசிகர்கள் விஜயை ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் எல்லாத்தையும் தாக்குபிடித்து அவர் வெற்றியடைய வேண்டும், என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்