- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ.50 லட்சம் மதிப்பிலான 2 புதிய டொயாட்டோ கார்களை வாங்கிய குணச்சித்திர நடிகர் - ...

ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 புதிய டொயாட்டோ கார்களை வாங்கிய குணச்சித்திர நடிகர் – அந்த காரணங்களால் தான் இது சாத்தியம் என்று பதிவிட்ட மகள்!

- Advertisement -

சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்கிற காமெடி சீரியலில் காதுே கேளாத பட்டாபி கேரக்டரில் நடித்தவர் எம்எஸ் பாஸ்கர். இவரது காமெடி நடிப்பும் டயலாக் டெலிவரியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்து எம்எஸ் பாஸ்கர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

குறிப்பாக நடிகர்கள் வடிவேலு விவேக் சந்தானம் போன்றவர்களுடன் பல படங்களில் எம்எஸ் பாஸ்கர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். குரு என் ஆளு என்ற படத்தில் பெண் வேடத்தில் சரோஜா தேவி கேரக்டரில் வரும் விவேக்தை புதிய பறவை சிவாஜி கேரக்டரில் எம்எஸ் பாஸ்கர் காதலிப்பார். இந்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

எம்எஸ் பாஸ்கர் ஒரு பின்னணி குரல் கலைஞர் என்பது பலரும் அறியாத விஷயம். பல படங்களில் அவர் டப்பிங் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்துக்கு பிறகு காமெடி நடிப்பில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்ற எம்எஸ் பாஸ்கர் குணச்சித்திர நடிப்புக்கு மாறி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.

பார்க்கிங் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்ததற்காக எம் எஸ் பாஸ்கருக்கு சமீத்தில் சிறந்த துணை நடிகர் தேசிய விருது கிடைத்தது. மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி மொழி பிரிவோம் சந்திப்போம் 8 தோட்டாக்கள் என பல படங்களில் குணச்சித்திர நடிப்பில் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றவர் எம்எஸ் பாஸ்கர்.

- Advertisement -

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியில் உள்ள எபிக் டொயாட்டோ கார் ஷோரூமிக்கு தன் குடும்பத்துடன் சென்ற நடிகர் எம்எஸ் பாஸ்கர் 2 புதிய கார்களை வாங்கியிருக்கிறார். ரூ. 46 லட்சம் மதிப்புள்ள டொயாட்டோ லெஜண்டா கார் மற்றும் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள ஒரு டொயோட்டா காரையும் அவர் வாங்கியிருக்கிறார்.

ஒரே நாளில் 2 டொயோட்டா கார்களை வாங்கிய நடிகர் எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மகன், மகள் மற்றும் பேத்தியுடன் அந்த நிகழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகள், என் அப்பாவின் உழைப்புக்கும் சேமிப்புக்கும் என் அம்மாவின் சிக்கனத்துக்கும் கிடைத்த பரிசுதான் இந்த புதிய டொயாட்டோ கார்கள் என்று அந்த பதிவில் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்