- Advertisement -
Homeபொழுதுபோக்குவாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட நடிகர் எம் எஸ் பாஸ்கர், அட்வைஸ் பண்றதா நெனைச்சு...

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட நடிகர் எம் எஸ் பாஸ்கர், அட்வைஸ் பண்றதா நெனைச்சு எரியற நெருப்புக்குள்ள கையை விட்டுட்டாரே? – விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் துணை நடிகர்கள் பலர் உண்டு. எப்போதுமே ஹீரோக்களை, காமெடியன்களை கொண்டாடும் ரசிகர்கள், இந்த துணை நடிகர்களை நடிப்பை ரசிப்பார்களே தவிர, அவர்களை பாராட்ட முன்வர மாட்டார்கள். சினிமா சார்ந்த அமைப்புகளும் அவர்களுக்கான அங்கீகாரம் தராது என்பதுதான் கசப்பான உண்மை.

அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அற்புதமான துணை நடிகர்களில் ஒருவர்தான் எம்எஸ் பாஸ்கர். துவக்கத்தில் சன்டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி தொடரில் பட்டாபி என்ற காது கேளாத மாமாவாக நடித்திருப்பார். அதிலேயே அவரது நடிப்பு மிக பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து அசத்தினார். எந்த மாதிரியான காமெடி ரோலிலும் எம் எஸ் பாஸ்கரால் சிறப்பான நடிப்பை தர முடியும். குறிப்பாக எங்கள் அண்ணா படத்தில், ரோட்டில் குடித்துவிட்டு வடிவேலு, பாண்டியராஜனுடன் அட்ராசிட்டி செய்யும் கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிறகு பல படங்களில் நடித்த அவர் 8 தோட்டாக்கள், பார்க்கிங், சபாபதி, மொழி போன்ற படங்களில் வேறு மாதிரியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த மாதிரியான ஒரு நல்ல கலைஞனுக்கு விருதுகள் கொடுத்து, சினிமா அமைப்புகளும், மத்திய மாநில அரசுகளும் கவுரவிக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் லாந்தர் படம் விழாவில் பேசிய நடிகர் எம்எஸ் பாஸ்கர், ரசிகர்கள் கொடுக்கிற 120 ரூபாயில், கோபுரம் கட்டப்போவது இல்லை. படம் பிடித்திருந்தால், நான்கு பேரிடம் சொல்லுங்கள். படம் பிடிக்கவில்லை என்றால், யாரிடமும் எதுவும் சொல்லாதீர்கள். ஒரு படத்தை எடுக்க முடிக்க எத்தனையோ பேர் கஷ்டப்படுகின்றனர், என்று கூறியிருந்தார்.

இந்த பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்றாவி படங்களை பார்க்க, நாங்கள் ஏன் 120 ரூபாய் தண்டம் செய்ய வேண்டும். படம் எடுக்க கஷ்டப்படுகிறார்கள் என்றால், நீங்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுங்கள். 120 ரூபாய் சம்பாதிக்க நாங்களும்தான் கஷ்டப்படுகிறோம். அதுக்கு 2 கிலோ அரிசி வாங்கினால் 4 நாளைக்கு பசிக்கு சாப்பிடுவோம் என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்