- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் திட்டமிட்ட இரண்டு உலகளாவிய சாதனைகள், கடைசியில் கைநழுவிப் போனது ஏன் - இசையமைப்பாளர்...

இயக்குனர் ஷங்கர் திட்டமிட்ட இரண்டு உலகளாவிய சாதனைகள், கடைசியில் கைநழுவிப் போனது ஏன் – இசையமைப்பாளர் தமன் சொன்ன உண்மைகள்!

- Advertisement -

தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கிய படம் கேம் சேஞ்சர். இந்த படத்துக்கு இசையமைத்தவர் தமன். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலின் தமன் பேசும்போது ஷங்கர் இயக்கிய படங்களில் சர்வதேச பாப் நட்சத்திர பாடகர்களான மைக்கேல் ஜாக்சன் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோரை இணைக்க இருந்த இரண்டு லட்சிய திட்டங்களை பற்றி பேசி இருக்கிறார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் தமன் கூறியதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்காக பாப் உலகின் ராஜா மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பணி செய்ய இசைப்புயல் ஏஆர் ரகுமான் திட்டமிட்டு இருந்தார். இந்த திட்டம் 2009ம் ஆண்டில் மே மாதம் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் ஜாக்சன் எதிர்பாராத விதமாக மறைந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதையடுத்து ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தில் தோப் என்ற பாடலின் ஆங்கில பதிப்பை சர்வதேச அளவில் வெளியிடவும் அந்த பாடலின் முகமாக பிரிட்னி ஸ்பியர்ஸை கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் காலநேர சிக்கல்கள் காரணமாக இந்த திட்டமும் கைவிடப்பட்டது என்று அந்த நேர்காணலில் இசையமைப்பாளர் தமன் தெரிவித்திருக்கிறார். இப்படி இரண்டுவிதமான திட்டங்கள் ஷங்கரால் திட்டமிட்டு கடைசியில் அது நிறைவேறாமல் போன சம்பவத்தை தமன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 இளைஞர்களில் ஒருவராக நடித்தவர்தான் தமன் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் அவர் பெரிய இசையமைப்பாளராக மாறி ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்துக்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஷங்கர் தனது சமீபத்திய வெளியீடுகள் இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட போதும் வெற்றியும் தோல்வியும் திரைப்படத் துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அவர் நினைத்தபடி இந்த சர்வதேச கூட்டணிகள் சாத்தியமாகாமல் போயிருக்கலாம். ஆனால் அவற்றுக்கு பின்னால் இருந்த அவரது உறுதியான லட்சியத்தை ரசிகர்கள் நினைத்துப் பார்த்து பெருமைப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்