- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம் ரிலீஸ் ஆனா, ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக அது இருக்கும், வேட்டையன் படம் குறித்து...

இந்த படம் ரிலீஸ் ஆனா, ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக அது இருக்கும், வேட்டையன் படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் – போடு வெடிய

- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் படத்தின் ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு படத்தின் இசையமைப்பாளரும் முக்கியத்துவம் பெற்று விடுகிறார். ஹீரோ, டைரக்டர், மியூசிக் டைரக்டர் மூன்று பேருக்குமே தரப்படும் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி வந்து விடுகிறது என்றால் அதை பலரால் நம்ப முடிவதில்லை. ஆனால் அதுதான் உண்மை .

இப்போதெல்லாம் ஹீரோக்களை போலவே டைரக்டர்களும், இசையமைப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். உதாரணமாக இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்துக்கு இசையமைக்க பத்து கோடி ரூபாய் வாங்குகிறார் என்ற தகவல் சமீபமாக வைரல் ஆகி வருகிறது. இன்றைக்கு ரஜினிகாந்த் விஜய் அஜித்குமார் கமல்ஹாசன் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு மியூசிக் டைரக்டராக இருப்பவர் அனிருத்.

அனிருத் இசையில்தான் ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்ததாக நடிகர் ரஜினிகாந்த் மேடையில் வெளிப்படையாக பேசியிருந்தார். படத்தின் இயக்குனரைக் காட்டிலும் இசையமைப்பாளர் தான் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார் என்று அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் வேட்டையன். பேட்ட ஜெயிலர் ஆகிய படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்துக்கு மூன்றாவது முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் தசெ ஞானவேல் டைரக்ட் செய்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி பகத் பாசில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அபிராமி, ரக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. தற்போது இசையமைப்பாளர் அனிருத், வேட்டையன் படம் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார்.

வேட்டையன் படம் வெளிவந்த பிறகு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் வைரலாகி வருகிறது. அனிருத் கூறுகையில், வேட்டையன் படத்தின் கதை மிகவும் வலுவானது. வேட்டையன் படம் வெளிவந்த பின் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று அனிருத் கூறியிருக்கிறார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதைக்களமே என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்தி ஞானவேல் எடுத்திருக்கிறார்.

சற்று முன்