- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இசையமைப்பாளரிடம் இரவல் கேட்டு வாங்கிய பைக்கை, போட்டு உடைத்த விஜய்... கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை...

பிரபல இசையமைப்பாளரிடம் இரவல் கேட்டு வாங்கிய பைக்கை, போட்டு உடைத்த விஜய்… கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என சூசகமாக கூறி இசையமைப்பாளர் வேதனை…

- Advertisement -

இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், ஆரம்ப காலத்தில் தனது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்திலேயே தொடர்ந்து படங்களை நடித்து வந்தார். சிறுவனாக இருக்கும்போது சின்ன சின்ன திரைப்படங்களில் தோன்றிய அவர், தனது தந்தை இயக்கத்தில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பிறகு செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதில் மாண்புமிகு மாணவன் திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அந்த படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில், தேவாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, விஜயுடன் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

- Advertisement -

“விஜய் சார் அப்போதே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான காரில்தான் வருவார். அன்றைக்கும் அப்படித்தான் காரில் வந்து அவர் இறங்கினார். அப்போது அருகில் எனது RD 350 பைக் நின்று கொண்டிருந்தது. அதை கவனித்த விஜய், இது யாருடைய பைக் என்று கேட்டிருக்கிறார். அங்கு இருப்பவர்கள் இது எனது பைக் என்று கூறி இருக்கிறார்கள்.

எனது அடுத்த திரைப்படமான மாண்புமிகு மாணவன் படத்தில், இந்த பைக்கை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன், உங்கள் பைக்கை எனக்கு தருகிறீர்களா என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். அப்போது நான் அவரிடம், எனக்கு இது மிகவும் பிடித்தமான வாகனம். இதை நீங்கள் ஓட்டினால் பரவாயில்லை. சண்டை பயிற்சியாளர்கள் ஒட்டி கீழே விழுந்து வாகனத்திற்கு எதுவும் ஆகி விடக்கூடாது சார் என்று கூறினேன். அதற்கு விஜய் சார் உங்கள் பைக் என்றால் அது என் பைக் மாதிரி கவலையே படாதீர்கள் என்று கூறிவிட்டு எடுத்துச் சென்றார்.

- Advertisement -

அதன் பிறகு ரொம்ப நாட்களாக நான் என்னுடைய பைக்கை பார்க்கவே இல்லை. நானும் சிறிது பிஸியாக இருந்து விட்டேன். மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரீ ரெகார்டிங்கிற்காக வரும்போது, முதல் காட்சியிலேயே விஜய் சார் ஓட்டி வந்த எனது பைக் பறந்து வந்து கீழே விழுந்தது. ஆஹா முதல் சாட்டிலேயே எனது பைக் இப்படி பறக்கிறதே என்று பார்த்தால், போகப் போக பல இடங்களில் கீழே விழுந்து பைக் மிகவும் அடி வாங்கி இருந்தது.

உடனடியாக நான் விஜய் சாரிடம், உங்களுக்கு ஏதும் அடிபடவில்லையே என்று கேட்டேன். இல்லை ஸ்ரீ எனக்கு ஏதும் அடிபடவில்லை என்று அவர் கூறினார். அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. இன்னும் அந்த பைக் என்னிடமே இருக்கிறது. அந்த பைக்கை பார்க்கும் போதெல்லாம், மாண்புமிகு மாணவன் திரைப்படம்தான் ஞாபகத்திற்கு வரும். இப்போதும் கூட அந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் நான் எனது பைக்கிற்காகவே அந்த படத்தை பார்ப்பேன். அந்தப் படத்தில் விஜய்யும் ஸ்டைலாக இருப்பார்” என்று ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்