- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்துக்காக நான் நிர்வாணமாகவும் நிற்பேன்... பகீர் கிளப்பிய மிஷ்கின்... அரண்டு போன ரசிகர்கள்...

இந்த விஷயத்துக்காக நான் நிர்வாணமாகவும் நிற்பேன்… பகீர் கிளப்பிய மிஷ்கின்… அரண்டு போன ரசிகர்கள்…

- Advertisement -

சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் மிஷ்கின். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதை வகுத்து அதை வெற்றிப்பாதையாக ஆக்கிய திறமையான இயக்குனர். இவரது இயக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி தோல்வியைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் ஏதாவது ஒரு விதத்தில் பேசப்பட்டன.

 

தனது இரண்டாவது திரைப்படமான அஞ்சாதே-வில் அவர் முதல் முறையாக பலராலும் அறியப்பட்டார். நண்பர்களுக்கு இடையேயான அப்படி ஒரு உறவையும், மோதலையும் யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். இந்த திரைப்படத்திலிருந்து மிஷ்கின் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் எதிர்பார்ப்பை தூண்ட ஆரம்பித்தது.

 

யுத்தம் செய் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனது இயக்கத்திற்கான திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்தார் மிஷ்கின். தற்போது அவர், பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருக்கிறார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் எந்த நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை.

 

இதேபோல் விஜய் சேதுபதியை வைத்து அவர், ட்ரெயின் திரைப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார். சில காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. க்ரைம் திரில்லராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ட்ரெயின் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத்குமார் இயக்கி சூரி நடித்திருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தத் திரைப்படத்தை பார்த்ததிலிருந்து எனக்கு பேய் பிடித்தது போல இருக்கிறது. நான் வினோத்தை மிகவும் திமிர் பிடித்தவன் என்று நினைத்தேன்.

 

ஆனால் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் அவன் என்னை செருப்பால் அடித்து விட்டான். இந்தத் திரைப்படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் etimes.inஎன்பதற்காக நான் நிர்வாணமாக கூட நிற்க தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தில் சூரியைத் தவிர வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்று பேசி இருக்கிறார். கொட்டுக்காளி திரைப்படம் குறித்த மிஷ்கினின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சற்று முன்