- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ வைத்த வாழை, மாரி செல்வராஜூக்கு அடித்த குபீர் அதிர்ஷ்டம் - ரூபாய் நோட்டு எண்ணுகிற...

வாழ வைத்த வாழை, மாரி செல்வராஜூக்கு அடித்த குபீர் அதிர்ஷ்டம் – ரூபாய் நோட்டு எண்ணுகிற மெஷின் எதுவும் தேவைப்படுமா இயக்குநருக்கு?

- Advertisement -

இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கும் படங்கள் பெரும்பாலும் சமுதாய ஏற்ற தாழ்வுகளை மையப்படுத்திய படங்களாகவே இருக்கின்றன. அதனால் கடுமையான விமர்சனத்தில் படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் சிக்கி கொள்பவர் மாரி செல்வராஜ். கடைசியாக இவரது இயக்கத்தில் வந்த படம் மாமன்னன்.

மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படம் மூலம்தான் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம், ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். இவரது படங்கள் ஜாதிய பாகுபாடு, வர்க்க பிரச்னை சார்ந்த விஷயங்களை பேசு பொருளாக கொண்டிருப்பதால் இவரது படங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதுவே, படம் பற்றிய விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது.

- Advertisement -

அதாவது பரியேறும் பெருமாள் என்ற முதல் படத்தில் கலையரசன், மாரிமுத்து, யோகிபாபு போன்ற சிலரே ரசிகர்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். இந்த படத்தின் அபார வெற்றியால், தனுஷ் ஹீரோவாக, நட்டி வில்லனாக நடித்த கர்ணன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் மாரி செல்வராஜ். அடுத்து, வடிவேலுவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படம், மாரி செல்வராஜை முன்னணி இயக்குநர் வரிசைக்கு கொண்டு வந்தது.

இப்போது, வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். கலையரசன் ஒருவரை தவிர, சில புதுமுகங்களை வைத்து இந்த படத்தை இவர் இயக்கி இருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் நிறைய சிறுவர், சிறுமியர் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. நிகிலா விமல், பிரியங்கா, திவ்யா துரைசாமி போன்ற அதிக பரிச்சயம் இல்லாத நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என இதுவரை மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ள மாரி செல்வராஜ், வாழை படத்தை இயக்குவதோடு, அந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். மூன்றே படங்களில், ஒரு இயக்குநர் ஒரு படத்தை தயாரிக்கும் அளவுக்கு அவருக்கு அதிக லாபம் கிடைத்துவிட்டதா என ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், வாழை படத்தை தயாரிப்பது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளம்தான். இந்த படத்தை தயாரிக்க, மாரி செல்வராஜிடம் ரூ. 10 கோடி வழங்கியுள்ளது. ஆனால், படத்தில் நடித்த புதுமுக நடிகர், நடிகையர் சம்பளம், படப்பிடிப்பு செலவு என மொத்தம் ரூ. 3 கோடி முதல், ரூ. 4 கோடி ரூபாய் வரை இந்த படத்துக்கு செலவான நிலையில், ரூ. 6 கோடி வரை தயாரிப்பிலேயே மாரி செல்வராஜூக்கு லாபம் கிடைத்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. நான்காவது படத்திலேயே இவ்வளவு பெரிய லாபமா என பலரும் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்