- Advertisement -
Homeபொழுதுபோக்குநாட்டாமை படத்தில் கிளாமர் டீச்சராக நடித்தவரின் மகள்தான் இந்த படத்தில் கதாநாயகியா? - ஆச்சரியப்பட்ட தமிழ்...

நாட்டாமை படத்தில் கிளாமர் டீச்சராக நடித்தவரின் மகள்தான் இந்த படத்தில் கதாநாயகியா? – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

எப்போதுமே சினிமாவில் பிரபலமான நடிகர் அல்லது நடிகையின் மகள் அல்லது மகன் சினிமாவில் வாரிசாக நடிக்க வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. பெரிய அளவில் வருமானம் புகழ் என்பது அரசியலை போல சினிமாவில் மட்டுமே சாத்தியம். அதனால் கலைஞர்களின் வாரிசுகளும் சினிமாவுக்குள் வந்துவிடுகின்றனர்.

கலைத்துறையில் உள்ள அப்பா அல்லது அம்மா செல்வாக்கால் சினிமாவுக்குள் எளிதாக வந்துவிட்டாலும் திறமை உழைப்பு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அவர்களால் தமிழ் சினிமாவில் காலூன்றி நிலைத்து நிற்க முடியும். இல்லை என்றால் எவ்வளவு பெரிய ஜாம்பவானின் வாரிசாக இருந்தாலும் ஓரிரு படங்களில் காணாமல் போகவும் நேரிடும். இதுதான் உண்மை.

- Advertisement -

அப்படி கலை வாரிசுகளாக வந்த பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருக்கின்றனர். அல்லது அவ்வப்போது சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். உதாரணமாக சிபிராஜ் அதர்வா கௌதம் கார்த்திக் விக்ரம் பிரபு ஸ்ருதிஹாசன் சண்முகபாண்டியன் என கலை வாரிசுகள் பலரும் நட்சத்திர நடிகர்களாக இன்னும் பிரபலமாக தமிழ் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.

இதற்கிடையே இப்போது ஒரு பிரபல நடிகையின் மகள் வாரிசாக தமிழ் சினிமாவில் குதித்திருக்கிறார். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டில் வெளியான படம் நாட்டாமை. இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை ராணி. நாட்டாமை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

அதன்பிறகு ஜெமினி படத்தில் சியான் விக்ரமுடன் ஓ போடு பாடல் காட்சியில் அசத்தலான குத்தாட்டம் போட்டிருந்தார். அடுத்து அவ்வை சண்முகி படத்தில் வேலைக்கார பெண்ணாகவும் கர்ணா உள்ளிட்ட சில படங்களிலும் ராணி நடித்திருந்தார். திரைப்படங்களில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் சில டிவி சீரியல்களிலும் அவர் பிறகு நடித்தார். இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த கொம்புசீவி என்ற படம் வருகிற 19ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் பொன் ராம் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருப்பவர் தார்னிகா. இவர் நாட்டாமை படத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான். அவர் சண்முக பாண்டியனுக்கு இந்த படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்கிற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அம்மா ராணி போல் இல்லாமல் தார்னிகா பல வெற்றிப் படங்களில் நடிப்பாரா என்று பார்ப்போம்.

- Advertisement -

சற்று முன்