- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன் - நயன்தாரா போல நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண வீடியோ...

விக்னேஷ் சிவன் – நயன்தாரா போல நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமண வீடியோ உரிமம் ஓடிடியில் விற்பனை – இத்தனை கோடிகளுக்கா?

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகர்ஜூனா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் அதேபோல் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள குபேரா படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா, தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்த நிலையில், விவாகரத்து பெற்றனர்.

- Advertisement -

அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியது. இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவுடன் தோழியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்களை நடிகன் நாகாஜூனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். வருகிற டிசம்பர் 4ம் தேதி அவர்களது திருமணம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. திருமண ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமண வீடியோவை ஓடிடி தளத்தில் வெளியிட உரிமம் பெறப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட 50 கோடி ரூபாய் விலைக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் உரிமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோ அடங்கிய நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த ஆவண படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், மீண்டும் நாக சைதன்யா – சோபிதா திருமண வீடியோ உரிமத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ரூ. 50 கோடி கொடுத்து வாங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இது நாக சைதன்யாவுக்கு நடக்கும் 2வது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்