இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். கிட்டத்தட்ட இதற்கான திரைக்கதையை மட்டும் அவர் ஆறு மாதங்களுக்கும் நேராக எழுதி இருக்கிறார். தனது முந்தைய திரைப்படங்களின், சாயல் இதில் நிச்சயமாக இருக்காது என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிடும் போது லோகேஷ் கனகராஜ் அதற்கான ரிலீஸ் தேதியையும் சேர்த்தே வெளியிட்டார். ஆனால் இந்த முறை அதை அவர் செய்யவில்லை. மேலும் திரைக்கதைக்கான பணிகளில் அவர் பல நாட்களை எடுத்து இருக்கிறார். இது எல் சி யூ வில் வராது என்றும் அவர் தெளிவுப்படுத்திவிட்டார்.
மிக முக்கியமாக, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட எந்த போதை விஷயங்களும் இதில் இருக்காது என்றும் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தப் படத்திற்கான அறிவிப்பு வீடியோவை ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. ரஜினியின் பழைய படத்தின் டயலாக்கை இதில் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
அதிலும் அனிருத்தின் இசை பலரும் முணுமுணுக்கும் வகையில் இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக லோகேஷ் கனகராஜ் சென்னை வர இருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் கூலி படத்தில் இருப்பதை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் சத்யராஜ். ஆனால் இந்த திரைப்படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் இல்லையாம். ரஜினியின் நண்பராக சத்யராஜ் வருகிறாராம்.
இதுபோக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் படத்தில் இருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற சூட்டிங் பணிகளில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் படத்தில் வில்லனாக, நாகர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு நடிகரான அவர் தற்போது தனுசுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில்தான் அவருக்கு லோகேஷ் கதை கூறியிருப்பதாகவும் இதற்கு நடிகரும் டிக் செய்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி மற்றும் நாகார்ஜுனாவின் காம்போவை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.





