தனுஷின் நடிப்பில் கடைசியாக வாத்தி படம் ரிலீஸானது. வெங்கி அட்லூரி இயக்கியிருந்த அந்தப் படம் தெலுங்கு படமா இல்லை தமிழ் படமாக என்ற பெரும் குழப்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. இது ஒருபுறம் இருக்க படத்தின் மேக்கிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் படம் படுதோல்வியை சந்தித்தது. திருச்சிற்றம்பலம் மூலம் கிடைத்த வெற்றியை வாத்தியில் தனுஷ் தவறவிட்டுவிட்டாரே அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.
அந்தப் படத்துக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். படமானது டிசம்பர் மாதம் வெளியாகிறது. கடந்த மாதம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வாத்தியில் விட்டதை கண்டிப்பாக கேப்டன் மில்லரில் தனுஷ் பிடித்துவிடுவார் என அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்க தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். வடசென்னையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்துவருகின்றன.
தனுஷின் 50ஆவது படத்தை முடித்த பிறகு மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கிறார் தனுஷ். சேகர் கம்முல்லா இயக்கும் அந்தப் படம் தனுஷுக்கு 51ஆவது படம். ஏற்கனவே தெலுங்கு இயக்குநருடன் இணைந்து வாங்கிய அடிக்கு இன்னொரு தெலுங்கு இயக்குநரை வைத்து மருந்து போட்டுக்கொள்ள அவர் இந்தப் படத்தில் முடிவெடுத்திருபதாக அவரின் ரசிகர்கள் கூறுகின்றனர். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார்.
A POWERHOUSE addition to the POWERFUL PROJECT
Wishing KING @iamnagarjuna Garu a very Happy Birthday
Delighted and honoured to have you on board @dhanushkraja @iamRashmika @sekharkammula @AsianSuniel @puskurrammohan @SVCLLP @amigoscreation @UrsVamsiShekar pic.twitter.com/uiUEf5tgkU
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) August 29, 2023
மேலும் நாகார்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகார்பபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனுஷ் 51ஆவது படத்தை தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் நாகார்ஜுனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கிறது. எனவே இதன் மூலம் நாகார்ஜுனா இந்தப் படத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே அவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த தோழா படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.





