தெலுங்கில் முன்னணி நடிகராக சீனியர் நடிகராகவும் இருப்பவர் நடிகர் நாகர்ஜூனா. தமிழில் பல ஆண்டுகளுக்கு முன்பே சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. சமீபத்தில் நடிகர் கார்த்தி தமன்னா நடித்த தோழா படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
கடந்த 1980 90களில் தமிழில் பல படங்களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பிரபு கார்த்திக் சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தவர் அமலா. குறிப்பாக மாப்பிள்ளை கொடி பறக்குது சத்யா ஜீவா அக்னி நட்சத்திரம் உறவை காத்த கிளி என பல படங்களில் நடித்திருக்கிறார். அம்பிகா ராதா ரேவதி வரிசையில் அமலாவும் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தார்.
தெலுங்கில் அமலா பிஸியாக நடித்த போது நடிகர் நாகர்ஜூனாவுடன் சில படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கமான பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியது. நாகர்ஜூனா திருமணமாகி தனது முதல் மனைவியை பிரிந்திருந்தார். அந்த சூழலில் அவர் அமலாவை காதலித்த நிலையில் நாகர்ஜூனா அமலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார்.
இதில் நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா, அதாவது நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர், நடிகை சோபிதா துலிபாலாவின் இந்நாள் கணவரான நாக சைதன்யா, நடிகர் நாகர்ஜூனா அமலா தம்பதியின் மகன் அல்ல. நாகர்ஜூனாவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் குபேரா. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
குபேரா படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திலும் நாகர்ஜூனா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.





