- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென தயாரிப்பாளராக மாறிய தனுஷ் பட நடிகை - அவர் தயாரிக்கப் போகும் படத்தின் கதாநாயகி...

திடீரென தயாரிப்பாளராக மாறிய தனுஷ் பட நடிகை – அவர் தயாரிக்கப் போகும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். தமிழில் ஓ காதல் கண்மணி காஞ்சனா வெப்பம் 24 சைக்கோ இருமுகன் இட்லி கடை திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நடிகை நித்யா மேனன் தெலுங்கு சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் கேயுரி புரடக்சன்ஸ் தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புரடக்சன் நம்பர் 5 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை நடிகர் நித்யா மேனனின் கேயுரி புரடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவாகும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். அதாவது நாயகியை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இதற்கு முன்பு கிருஷ்ணா ஓவியா நடித்த யாமிருக்க பயமே ஜீவா நடித்த கவலை வேண்டாம் வைபவ் வரலட்சுமி நடித்த காட்டேரி காஜல் அகர்வால் நடித்த கருங்காப்பியம் ஆகிய படங்களை இயக்கியவர் டிகே என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ விஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் நடிகை நித்யா மேனன் இணைந்து தனது கேயுரி புரடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.

இந்த படத்தின் கூடுதல் தகவல்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்க போகும் பிற நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் டைட்டில் குறித்த விவரங்கள் மிக விரைவில் அப்டேட் செய்யப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடிகையாக வலம் வந்த நடிகை நித்யாமேனன் இந்த படம் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சற்று முன்