- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னடா இது அன்னபூரணிக்கு வந்த சோதனை... ஆறு நாட்களில் அவ்வளவுதான் வசூலா... இவங்க உண்மையிலேயே லேடி...

என்னடா இது அன்னபூரணிக்கு வந்த சோதனை… ஆறு நாட்களில் அவ்வளவுதான் வசூலா… இவங்க உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார் தானா!…

- Advertisement -

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில், அங்குள்ள லோக்கல் சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதன் பிறகு சினிமாவில் நடிக்க அவர் வாய்ப்பு தேடிய போது, ஐயா படத்தின் மூலம் நயன்தாராவை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தார் இயக்குனர் ஹரி. இதன்பிறகு நயன்தாராவின் கேரியர், சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றது.

அதில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்ததால் பெரிய அளவில் பேசப்பட, அங்கிருந்து தனது வெற்றி பயணத்தை நயன்தாரா தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த நயன்தாரா, பில்லா, யாரடி நீ மோகினி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

- Advertisement -

இதன் பிறகு சிறிது காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பிக்க அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இந்த சமயத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா, பிற்காலத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் ஷாருக்கான் – அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்பட உலகில் அவர் அறிமுகமானார். அந்தப் படத்திற்காக மட்டும் அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இது மட்டுமல்லாமல், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்திலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். இதில் மண்ணாங்கட்டி என்னும் திரைப்படம் அவரது நடிப்பில் உருவாகி வருகிறது. அதேசமயம் தனது 75 வது திரைப்படமான அன்னபூரணியை அதிக அளவில் நம்பி இருந்தார் நயன்தாரா. பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, சமையல் துறையில் எந்த அளவு உயர்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இதன் டீசரும் ஓரளவு பேசப்பட்ட நிலையில், கடந்த ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தை இந்த திரைப்படம் பெற்றதால், வசூல் குவிக்க தவறியது. கடந்த ஆறு நாட்களில் அந்த திரைப்படம் வெறும் மூன்று கோடியே 55 லட்சம் ரூபாய் மட்டும் வசூல் செய்துள்ளது. சென்னை வெள்ள பாதிப்பால் இங்கு திரைப்படத்திற்கு மக்கள் வராமல் இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. ஆனால் அவரது திரைப்படம் அதில் பாதி கூட வசூல் ஈட்டவில்லையே என்று பலரும் கமண்ட் அடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்