கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் அவர்களது இமேஜ் ரசிகர்களிடம் சரிந்து விடும். அதனால் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான முன்னணி நடிகைகள் சினிமாவில் நடிக்க வர மாட்டார்கள். அதன் பிறகு 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்கள் சினிமாவின் ரீ என்ட்ரி கொடுப்பார்கள்.
அப்படி அவர்கள் வரும்போது அக்கா அண்ணி அம்மா சித்தி போன்ற நடுத்தர வயது பெண்மணி கேரக்டரில் தான் நடிப்பார்கள். ஆனால் அந்த பார்மூலாவை அடித்து நொறுக்கி தமிழ் சினிமாவில் மாற்றி காட்டியவர் நடிகை நயன்தாரா. அவரைத் தொடர்ந்து நடிகைகள் ராஷ்மிகா மந்தனா கீர்த்தி சுரேஷ் சமந்தா உள்ளிட்டோர் திருமணத்துக்கு பிறகும் பிஸியான நடிகைகளாக நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் பிஸியான ஒரு நடிகையாக பழைய மார்க்கெட்டுடன் அதே இமேஜ் உடன் இப்போதும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இப்போது அவர் நடிகர் ராகவா லாரன்ஸ் தயாரித்து டைரக்ட் செய்யும் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 130 நாட்கள் தொடர்ந்து நடந்து முடிந்த நிலையில் இப்போது 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது காஞ்சனா சீரிஸ்சில் உருவாகும் 4வது படமாகும். வழக்கமான திரில்லர் கதையாக இது உருவாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நடிகை நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை என்பதை ஒரு பாலிசியாகவே வைத்திக்கிறார். மாலை 6 மணிக்கு பிறகு அவர் சூட்டிங்கில் பங்கேற்க மாட்டார்.
காலை 11 மணிக்கு வந்தால் மாலை 5 மணி வரை நடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி விடுவார். இதுதான் அவரது வழக்கமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் தனது குழந்தைகள், அவரது கவனிப்பின்றி இரவில் இருக்க முடியாது என்பதால் அவர் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக இரவு நேர படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்பதை உறுதியான ஒரு பாலிஸியாக வைத்திருந்தார்.
படத்தில் அவரை கமிட் செய்யும்போதே இரவு நேர ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதையும் அவர் ஒரு கண்டிஷனாகவே வைத்திருந்தார். ஆனால் இப்போது நடிகை நயன்தாரா காஞ்சனா 4 படத்தில் இரவு நேர சூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.அவரது குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டதால் இரவில் அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் காஞ்சனா 4 பேய் கதை படம் என்பதால் இரவில்தான் அதுசார்ந்த காட்சிகள் படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதாலும் நயன்தாரா இரவில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





