- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து தோல்வி படங்களை தந்ததால் இந்த முடிவுக்கு மாறினாரா நடிகை நயன்தாரா? மூக்குத்தி அம்மன் 2...

தொடர்ந்து தோல்வி படங்களை தந்ததால் இந்த முடிவுக்கு மாறினாரா நடிகை நயன்தாரா? மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் இது தொடருமா?….

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்பு லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக மாறினார். அவர் உச்சத்துக்கு போன நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

நடிகை நயன்தாராவை போலவே நடிகர் அஜீத்குமாரும் அவர் நடிக்கும் படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது இல்லை. இதற்கு சம்மதிக்கும் இயக்குனர் தயாரிப்பாளர் படங்களில் மட்டுமே அவர் நடிக்க கமிட் ஆகிறார். இதை அவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். நயன்தாராவும் அதே பாஃர்மூலாவில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே தெலுங்கில் இயக்குனர் அனில்ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த மன சங்கர வரபிரசாத் காரு என்ற படம் வரும் சங்கராந்தி பண்டிகைக்கு, 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோசனுக்கு நடிகை நயன்தாரா ஒத்துழைப்பு தந்திருக்கிறார்.

மன சங்கர வரபிரசாத் காரு தெலுங்கு படத்துக்காக நடிகை நயன்தாரா, இயக்குனர் அனில் ரவிபுடியுடன் இணைந்து ஒரு பிரமோஷன் வீடியோவில் நடனம் ஆடியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுக்கும் நடிகை நயன்தாரா, தெலுங்கு படத்துக்கு மட்டும் பிரமோ செய்யலாமா? என்கிற விமர்சனமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட் மிகவும் டல்லடித்து வருகிறது. அவர் திருமணத்துக்கு பிறகு நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. மேலும் புதிய இளம் நடிகைகளின் வரவு காரணமாக நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன.

அதனால்தான் நயன்தாரா, தெலுங்கு படத்தின் பிரமோ வீடியோவில் நடனம் ஆடியிருக்கிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. அதே போல் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியிலும் நயன்தாரா பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்