- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் மீது குற்றம் சாட்டிய நயன்தாரா... லேடி சூப்பர் ஸ்டாரின் பதிவுக்கு அத்தனை நடிகைகள் லைக்...

தனுஷ் மீது குற்றம் சாட்டிய நயன்தாரா… லேடி சூப்பர் ஸ்டாரின் பதிவுக்கு அத்தனை நடிகைகள் லைக் செய்ததற்கு இதுதான் காரணமா… அட இப்படி கூட இருப்பார்களா…

- Advertisement -

நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரம் பிடித்தார். இவர்களின் திருமண நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களின் திருமண வீடியோவையும் சேர்த்து டாக்குமெண்டரி ஆக எடுத்து netflix ஓடிடி தளத்திற்கு கொடுத்தனர்.

 

- Advertisement -

இதற்காக அவர்கள் ஒரு கணிசமான தொகையை பெற்றனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாக இந்த வீடியோ வெளியாகவே இல்லை. நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18-ஆம் தேதி இது ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு ஹைப்பும் இல்லை.

 

- Advertisement -

இப்படியான நேரத்தில் தான் நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் இரண்டு ஆண்டுகள் இந்த டாக்குமென்டரி தாமதமானதற்கு முழுக்க முழுக்க தனுஷ் தான் காரணம் என்று அவர் கூறியிருந்தார். நானும் ரவுடிதான் பட காட்சிகளை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆனால் அதற்கான என் ஒ சி சான்றிதழை தனுஷ் அளிக்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

 

அவர் பதில் ஏதும் கூறாததால் இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்வார் என்றும் கடுமையாக பேசியிருந்தார். இப்படியான சூழலில்தான் அதிலிருந்து பல தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. அதாவது இந்த என்ஓசி சான்றிதழை பெறுவதற்கு விக்னேஷ் சிவன் நேரடியாக தனுஷை அணுகவில்லை என்று கூறப்படுகிறது.

 

தனுஷின் பி ஏ மூலம் மட்டுமே பேசி அந்த சான்றிதழை கேட்டதாகவும் அதற்கு மறுப்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு நயன்தாராவும் தனுஷின் பிஏவிடம் கேட்டபோது இதே பதில்தான் வந்திருக்கிறதாம். இருந்தாலும் நடிகரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார் நயன்தாரா. தனுசும் அதற்கு ஒப்புக்கொள்ள, இல்லை இல்லை என் அலுவலகத்திற்கு தான் வர வேண்டும் என்று நயன்தாரா தெரிவித்திருக்கிறாராம். இதனால் தனுஷ் பதில் ஏதும் கூறாமல் அப்படியே விட்டதாக கூறப்படுகிறது.

 

அது மட்டுமல்லாமல் தனுசை கடுமையாக சாடி நயன்தாரா வெளியிட்டு இருந்த அறிக்கைக்கு, மலையாள நடிகைகள் பார்வதி உள்ளிட்டோர் லைக்ஸ் தெரிவித்தனர். இதுவும் நயன்தாரா கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே அந்த நடிகைகள் செய்ததாக கூறப்படுகிறது. நயன்தாரா தான் அவர்களுக்கு தொடர்பு கொண்டு தனது பதிவுக்கு லைக்ஸ்களை தெரிவிக்குமாறு கூறியதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனிடையே நயன்தாராவின் பதிவுக்கு பதில் ஏதும் கூறாமல் தனது அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் தனுஷ்.

- Advertisement -

சற்று முன்