தமிழ் சினிமாவில் 2005ம் ஆண்டில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. முதல் படமே பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா நட்சத்திர நடிகையாகவும் மாறினார். லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.
மேலும் கதாநாயகியை மையப்படுத்திய சில படங்களிலும் அவர் நடித்து அந்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. அதனால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகையாகவும் நயன்தாரா இருந்து வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் நடிகை திரிஷா உள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த பிறகும் நடிகை நயன்தாரா மார்க்கெட் சரியவில்லை. ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தான் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த மனசங்கர வரபிரசாத்காரு என்ற படம் மட்டுமே வெற்றி பெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நயன்தாரா – கவின் இணைந்து நடித்த ஹாய் படம் வெளியானது. இந்த படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியான நிலையில் 4 நாட்களில் மொத்தமே 4 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளது. மேலும் அக்கா தம்பி போல் உள்ளது. காதலர்கள் போன்ற உணர்வே ரசிகர்களுக்கு வராதது படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
அதே போல் கன்னட மொழியில் உருவாகி தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் வெளியான டாக்ஸிக் படமும் நயன்தாராவுக்கு கைகொடுக்கவில்லை. இந்த படத்தில் கதாநாயகன் யஷ் சகோதரியாக நயன்தாரா நடித்திருந்தார். எதிர்மறை விமர்சனங்களால் இந்த படமும் எடுபடவில்லை. இந்த படம் 6 நாட்களில் 304 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
இப்படி டாக்ஸிக் ஹாய் என நயன்தாரா பிரதான கேரக்டரில் நடித்த 2 படங்களுமே அடுத்தடுத்து வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தை தான் நயன்தாரா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படமாக அவருக்கு கம்பேக் தருமா என்பதை அந்த படம் வெளியானால் தான் பதில் கிடைக்கும்.





