- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க அந்த மூத்த நடிகை மறுத்துவிட்டாரா... ஒட்டுமொத்த கதையையும் கேட்ட...

என்னது தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க அந்த மூத்த நடிகை மறுத்துவிட்டாரா… ஒட்டுமொத்த கதையையும் கேட்ட பிறகு நடிகை இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன?…

- Advertisement -

அரசியலில் களமிறங்கி அடுத்தடுத்த அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது கடைசி திரைப்படத்திற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். ஹெச் வினோத் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 

- Advertisement -

இந்தப் படத்திற்கான கதையை முதலில் அவர் விஜய் சேதுபதியிடம் தான் கூறியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கமலஹாசனுக்கு இந்த கதை சென்றது. இதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் கமல்ஹாசன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான போஸ்டரில் கையில் தீப்பந்தத்துடன் கம்பீரமாக காட்சியளித்தார் கமல்ஹாசன்.

 

- Advertisement -

அப்போதே இது அரசியல் சார்ந்த திரைப்படம் என்று கூறப்பட்டது. படத்திற்கான சூட்டிங் தொடங்க இருக்கும் வேலையில் திடீரென, அதன் பணிகள் தள்ளிப் போடப்பட்டன. இதற்கான காரணம் என்னவென்று சொல்லப்படவே இல்லை. இப்படியான சூழலில் தான் அந்தக் கதை விஜயிடம் சென்று இருக்கிறது.

 

இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அவருடன் மலையாள நடிகை மமீதா பைஜூவும் இடம் பெற்று இருக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்க, கௌதம் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படத்திற்கான பணிகளை, வினோத் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

 

அனிருத் இசையமைக்க இதன் முதல் பாடல் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது. தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கிய கேமியோ ரோலில் நடிப்பதற்காக படக்குழுவினர் நயன்தாராவை அணுகியதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கதையையும் கேட்ட நயன்தாரா, படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் இறுதி படத்தில் நயன்தாரா நடிக்கும் அடுத்ததாக கோலிவுட்டில் கூறப்படுவது, தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்