- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் ரஜினி கமல் விஜய் அல்லு அர்ஜூன் போன்றவர்கள் அதை நிறுத்த வேண்டும், அவர்களால் நான்...

நடிகர்கள் ரஜினி கமல் விஜய் அல்லு அர்ஜூன் போன்றவர்கள் அதை நிறுத்த வேண்டும், அவர்களால் நான் மிகவும் சிரமப்படுகிறேன் – பாலிவுட் நடிகர் ஷாருக்கன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

பாலிவுட்டில் ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனுடன் ஹே ராம் படத்திலும் ஷாருக்கான் நடித்திருந்தார். அவர் நடித்த பதான் ஜவான் இந்தி படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கின்றன.

அதிலும் தமிழ் பட இயக்குனர் அட்லிக்கு, தனது ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். நயன்தாரா விஜய் சேதுபதி பிரியாமணி யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அட்லிக்கு இந்த படம் பாலிவுட்டில் பெரிய மரியாதையை பெற்றுத் தந்திருக்கிறது. அடுத்து அட்லி சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் மனிஷா கொய்ராலாவை காதலிக்கும் கேரக்டரில் ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த படத்தில் ஓடுகிற ரயிலில் ஷாருக்கான் நடனமாடிய தக்க தையா தையா தையா பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க முதலில் நடிகர் ஷாருக்கானை தான் லோகேஷ் அணுகியுள்ளார். ஆனால் சில காரணங்களால் ஷாருக்கான் கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அந்த கேரக்டரில் அமீர்கான் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பெரும்பாலும் நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாடல் காட்சிகளை மிக பிரமாண்டமாக எடுப்பார்கள். படத்தில் பாடல் காட்சிகள் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டம் போடுவார்கள். அதே நேரத்தில் வயதான நடிகர்கள் கூட நடனத்தில் அதிக சுறுசுறுப்பாக ஆடி ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஷாருக்கான் இதுபற்றி கூறுகையில், எனக்கு தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் மகேஷ் பாபு அல்லு அர்ஜூன் ராம்சரண் யாஷ் போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். எனக்கு அவர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அவர்கள் எல்லாம் இவ்வளவு வேகமாக நடனம் ஆடுவதை நிறுத்த வேண்டும். அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடனமாடுவது எனக்கு சிரமமாக இருக்கிறது, என்று ஷாருக்கான் கூறியிருக்கிறார்.

சற்று முன்