- Advertisement -
Homeபொழுதுபோக்குஜவான் படம் கொடுத்த வெற்றி.. பாலிவுட்டில் ரவுண்டு கட்டி அடிக்க தயாராகும் நயன்தாரா?

ஜவான் படம் கொடுத்த வெற்றி.. பாலிவுட்டில் ரவுண்டு கட்டி அடிக்க தயாராகும் நயன்தாரா?

- Advertisement -

ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன் தாரா தமிழில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ஏகப்பட்ட பிரச்னைகளையும், தனி நபர் விமர்சனத்தையும் சந்தித்த அவர் தனது பாதையில் மட்டும் கவனத்தை வைத்ததால் இப்போது அவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். குறிப்பாக நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தவர் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில்கூட அவர்களின் முதல் வருட பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடினார் நயன்.

திருமணமாகிவிட்டது குழந்தை பிறந்துவிட்டது எனவே அவர் இனி சினிமாவில் கவனம் செலுத்தமாட்டார் என்று ஒருதரப்பினர் கூறினர். ஆனால் அதெல்லாம் கிடையாது என்ற வகையில் குழந்தை பிறந்த பிறகு மேற்கொண்டு படங்களில் தீவிரமாக நடித்துவருகிறார். குறிப்பாக நடிப்பு மட்டுமின்றி தொழிலிலும் இறங்கியிருக்கும் அவர் தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறார்.

இந்த சூழலில் அட்லீ ஹிந்தியில் அறிமுகமான ஜவான் படத்தின் மூலம் நயனும் ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக பாலிவுட்டில் பெரும் ரவுண்டு வரலாம் என்ற திட்டத்தில் இருந்தார். அவரது திட்டத்தின்படி ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. குறிப்பாக நயன் தாராவை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் யாரு ப்பா இவங்க நடிப்பிலும், ஆக்‌ஷனிலும் பிச்சு எடுக்குறாங்களே என கமெண்ட்ஸ் கூறினர்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி பாலிவுட்டின் ஃபேமஸ் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் படத்தில் நயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் 99 சதவீதம் நடிக்க நயன் ஒத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

இதற்கிடையே அவர் தமிழிலும் பிஸியாகவே இருக்கிறார். அஹமது இயக்கத்தில் வெளியான இறைவன் படத்தில் நடித்த அவர் அடுத்ததாக தன்னுடைஅய் 75ஆவது படத்திலும், மண்ணாங்கட்டி என்ற படத்திலும் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட், பாலிவுட் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

சற்று முன்