தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ள நயன்தாரா, திருமணமான பின்பும் இன்னும் ரசிகர்களின் மத்தியில் அதே கெத்துடன் தான் வலம் வருகிறார். பொதுவாக, திருமணமான பின்பு, பெரும்பாலான ரசிகர்கள், தங்களது திரையுலக கனவு கன்னியை மறந்துவிடுவதுதான் வழக்கம்.
ஆனால், நயன்தாரா மட்டும் இதில் விதிவிலக்காக, ரசிகர்களின் எவர்கிரீன் நாயகியாக இருக்கிறார். இதனால், சோஷியல் மீடியாவில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவுகள் வந்தால், லட்சக்கணக்கான ரசிகர்கள் உடனடியாக பார்த்து விடுகின்றனர்.
அந்த வகையில், இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாராவின் ஒரு பதிவு, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 2 லட்சம் இதயங்களை தொட்டிருக்கிறது. அந்த பதிவை பார்த்த ரசிகர்களும், தங்களது அன்பின் வெளிப்பாடாக இதயங்களை பறக்க விட்டிருக்கின்றனர்.
இன்று நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள். தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை, கவிதை போல எழுதியிருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கும் அதன் தமிழாக்கம் இது…
‘என்னுடைய ஆசிர்வாதத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த சிறந்த நாளில் உங்களைப் பற்றி நான் எழுதியே ஆக வேண்டும். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், நம் உறவின் மீது கொண்டிருக்கும் மரியாதைக்கும் நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், உங்களை போல யாருக்குமே இருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்வில் வந்து, என் வாழ்க்கையை அழகுமிக்க கனவுகளாக, அர்த்தமுமள்ளதாக மாற்றியவர் நீங்கள்.
நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாமே, சிறப்பானதாக இருக்கிறது.வாழ்க்கையில் எல்லாமே உங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துகிறேன், உங்கள் கனவுகள் நிஜமாகட்டும். சந்தோஷங்களில் மூழ்கி திளைக்க, கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும். ஐ லவ்யூ’ என, மனம் உருகி தன் காதல் கணவருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து இருக்கிறார் நயன்தாரா.





