- Advertisement -
Homeபொழுதுபோக்குதுல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் 7 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடிகளா? அதிகாரபூர்வமாக அறிவித்த...

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் 7 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடிகளா? அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் – போட்றா வெடிய!

- Advertisement -

மலையாள சினிமாவில் இப்போதும் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. 70 வயது கடந்தும் இப்போதும் நடிப்பில் ரசிகர்களை அசத்தி கொண்டிருக்கிறார். தமிழில் தளபதி ஆனந்தம் மறுமலர்ச்சி எதிரும் புதிரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கிளிப்பேச்சு கேட்கவா மௌனம் சம்மதம் உள்ளிட்ட பல படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார்.

நடிகர் மம்முட்டியின் மகன்தான் மலையாள நடிகர் துல்கர் சல்மான். முன்னணி நடிகரான அவர் தமிழில் சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.

துல்கர் சல்மான் மலையாள நடிகராக இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பை பெற்று வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான புதிய படம் லக்கி பாஸ்கர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 31ம் தேதி தீபாவளிக்கு இந்த படம் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தை வெங்கி அட்லூரி டைரக்ட் செய்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. லக்கி பாஸ்கர் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 4 சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுடன் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த தீபாவளியன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண மனிதராக இருக்கும் துல்கர் சல்மான், அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் கோடீஸ்வரனாக மாறுவதுதான் இந்த படத்தின் மையக்கரு. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் லக்கி பாஸ்கர் படம் வெளியாகி ஏழு நாட்களில் உலகளவில் இதுவரை ரூ. 71.2 கோடியை வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்துள்ள சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. தீபாவளிக்கு தமிழ்நாட்டில் 150 தியேட்டர்களில் ரிலீஸான லக்கி பாஸ்கர் படம் முதல் நாளே 220 திரைகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும் பிரதர், பிளடி பெக்கர் படங்களை தூக்கிவிட்டு, அதற்கு பதிலாக அதிகமான எண்ணிக்கையில் லக்கி பாஸ்கர் படம் திரையிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்