தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு படமாக பராசக்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. நகர பகுதிகளில் மட்டுமே ரசிகர்கள் கூட்டம் காணப்பட்ட நிலையில் புறநகரில் இருந்த பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமின்றி முதல் நாளே தியேட்டர் காற்று வாங்கியுள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளிவராத சூழலில் அவரது ரசிகர்கள்தான் பராசக்தி படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை கூறுவதாக முதலில் தகவல் பரவினாலும் படம் பார்த்த ஒரு சிலர், நான் சிவகார்த்திகேயன் ரசிகன்தான். பெரிய எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால் படம் சரியில்லை. கொட்டாவி தூக்கம்தான் வருகிறது என்று வெளிப்படையாகவே கூறிச் சென்றனர்.
இன்னும் பலர், இந்த படத்தின் நாயகன் உண்மையில் ரவி மோகன்தான். இந்த படத்தில் அவரது நடிப்பு மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது. மற்றபடி கதை திரைக்கதை சிவகார்த்திகேயன் என யாருமே கதையிலும் நிற்கவில்லை. மனதிலும் ஒட்டவில்லை என்று கூறுகின்றனர். அதனால் இந்த படத்தை பொருத்த வரை ரவிமோகனே ஸ்கோர் செய்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
இதை உறுதி செய்வது போல நேற்று பராசக்தி படம் பார்த்துவிட்டு வந்த நடிகர் ரவிமோகனின் நெருங்கிய தோழி பாடகி கெனிஷா கூறும் போது, இது ரவிக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் போல உள்ளது. அவரை தவிர படத்தில் எதுவுமே தெரியவில்லை என்றும் ஓபனாக ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார். ஆக மொத்தத்தில் ரவிமோகனை உயர்த்தி விட்டு சிவகார்த்திகேயனை இயக்குனர் சுதா கொங்கரா டம்மியாக்கி விட்டதாக எஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே படம் பார்த்தவர்களில் ஒரு சிலர், பராசக்தி படத்துக்கு சென்சார் சான்றிதழ் தராமல் நிறுத்தி விட்டு ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் கொடுத்திருக்கலாம். அது ரீமேக் படமாக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாகவாவது இருந்திருக்கும். பராசக்தி படம் உட்கார முடியவில்லை என்றும் புலம்பியபடி விமர்சனம் செய்திருக்கின்றனர்.
மொத்ததில் பராசக்தி படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில் இப்போது விஜய் நடித்த மாஸ்டர் லியோ தெறி ஆகிய படங்களும் பொங்கல் களத்தில் இருக்கின்றன. இதுதவிர சர்வர் சுந்தர் திரவுபதி 2 தலைவர் தம்பி தலைமையில் மற்றும் வா வாத்தியார் ஆகிய 4 புதிய படங்களும் பொங்கலுக்கு வருகின்றன. அதனால் பராசக்தி தாக்கு பிடிக்குமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.





