- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பெண்ணாக இருந்தால் சூர்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருப்பேன் - மேடையில் பகிரங்கமாக பேசிய பிரபல...

நான் பெண்ணாக இருந்தால் சூர்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருப்பேன் – மேடையில் பகிரங்கமாக பேசிய பிரபல நடிகர்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் வருகிற மே 1ம் தேதி அதாவது நாளை மறுதினம் வியாழன் தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் ரிலீஸாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ரசிகர்கள் கொண்டாடும் விதமான எந்த ஒரு வெற்றிப் படமும் நடிகர் சூர்யாவுக்கு அமையவில்லை. குறிப்பாக கடந்தாண்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படமும் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது. அதனால் ரெட்ரோ படம் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், எனக்கு நடிகர் கமல்ஹாசனை ரொம்பவும் பிடிக்கும். அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்த போது அவரிடம் கட்டிப் பிடித்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன். அவரும் அதற்கு சம்மதித்து என்னை கட்டிப் பிடித்தார். பிறகு 3 நாட்களாக நான் குளிக்காமல் அப்படியே இருந்தேன். அவரது வாசம் அவரது ஆரோ என்னை விட்டு 3 நாட்களாக போகவில்லை.

நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் நடிகர் கமல்ஹாசனை தான் திருமணம் செய்திருப்பேன். அந்தளவுக்கு அவரை எனக்கு பிடிக்கும் என்று வெளிப்படையாக பேசியிருந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இப்போது நடிகர் சூர்யா குறித்து பேசிய பிரபல மலையாள நடிகர், பெண்ணாக நான் இருந்தால் சூர்யாவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருப்பேன் என பகிரங்கமாக பேசி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

- Advertisement -

ரெட்ரோ படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நேற்று நடந்தது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பேசியதாவது, நான் ஒரு பெண்ணாக இருந்தால் கண்டிப்பாக நடிகர் சூர்யாவுக்கு ஒரு லவ் லெட்டராவது கொடுத்திருப்பேன்.

அவருடைய தோற்றத்திற்கும் அழகுக்கு மட்டும் நான் அதனை கொடுத்து இருக்க மாட்டேன். அவருடைய மனதிற்கும் கண்ணியத்திற்கும் அவர் செய்யும் நல்ல காரியத்திற்கும் கொடுத்திருப்பேன். அவரைப் பற்றி எவ்வளவு அதிகம் உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு உங்களுக்கு அவரை பிடிக்கும். மேலும் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார் என்று மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்