- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு அடுத்து ஸ்ட்ரெய்ட்டா அல்லு அர்ஜுன் தான்.. கெத்து காட்டும் நெல்சன் திலீப்குமார் - விவரம்...

ரஜினிக்கு அடுத்து ஸ்ட்ரெய்ட்டா அல்லு அர்ஜுன் தான்.. கெத்து காட்டும் நெல்சன் திலீப்குமார் – விவரம் இதோ

- Advertisement -

தொலைக்காட்சியில் இருந்து பெரியதிரைக்கு “கோலமாவு கோகிலா” படம் மூலம் அறிமுகமான இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அதற்கு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இப்படி முதல் இரண்டு படங்களிலுமே வெற்றி கண்ட நெல்சன் தனது மூன்றாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகரான விஜய் வைத்து “பீஸ்ட்” படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

வசூல் ரீதியாக பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது இருந்தது. இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “ஜெயிலர்” என்ற படத்தை இயக்கிய அவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக உயர்ந்தார்.

- Advertisement -

தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வந்த சூப்பர் ஸ்டாருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு “ஜெயிலர்” படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாவது பாகத்தினையும் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெலுங்கு பட முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. புஷ்பா படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இந்தியா முழுவதும் அறியப்படும் ஹீரோவாக அல்லு அர்ஜுன் மாறினார்.

- Advertisement -

அதோடு அண்மையில் புஷ்பா 2 படத்திலும் நடித்து முடித்து இருந்தார். அதற்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதாக இருந்த வேளையில் சம்பளப் பிரச்சனை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அல்லு அர்ஜுனனை சந்தித்த நெல்சன் திலீப்குமார் அவரிடம் ஒரு கதை கூறியிருப்பதாகவும் அந்த கதை அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து நெல்சன் திலீப்குமார் புதிய படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது. இப்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவை நெல்சன் இயக்க இருப்பது கோலிவுட் சினிமா பக்கத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்