- Advertisement -
Homeபொழுதுபோக்குகெட்டப்பில் தனுஷிற்கு போட்டியாக வந்த ஸ்டார் ஹீரோ... நெல்சன் தயாரிக்கும் படத்தின் டைட்டிலே வித்தியாசமே இருக்கேப்பா...

கெட்டப்பில் தனுஷிற்கு போட்டியாக வந்த ஸ்டார் ஹீரோ… நெல்சன் தயாரிக்கும் படத்தின் டைட்டிலே வித்தியாசமே இருக்கேப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் முக்கியமானவராக இருப்பவர் கவின். லிப்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது திரையுலக பயணத்தை அவர் தொடங்கினார். ஹாரர் பாணியில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.

 

- Advertisement -

இருப்பினும் அந்த திரைப்படம் பலரிடமும் சென்று ரீச் ஆகவில்லை. இந்த சமயத்தில் கவினின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமாக அமைந்த திரைப்படம் டாடா. இளம் வயதில் தந்தையாகும் ஒரு இளைஞனின் கதையை, மிகவும் சுவாரசியமாக எடுத்திருந்தார் இயக்குனர். குறிப்பாக கவின் முதிர்ச்சியான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

 

- Advertisement -

முதல் பாதி முழுவதும் காதலர்களுக்கு இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி இருந்த அந்த திரைப்படம் இரண்டாம் பாதியில் தந்தைக்கு மகனுக்குமான உறவு, பிரிந்த மனைவியுடனான எதிர்கொள்ள தயங்கும் கணவன் என வேறு பாதையில் இந்த திரைப்படம் பயணித்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் டாடா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதில், பியார் பிரேம காதல் பட இயக்குனர் இளனுடன் கவின் இணைந்தார். ஸ்டார் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஓராண்டாக நடைபெற்றது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

இளம் வயதில் இருந்தே நடிகனாக வேண்டும் என துடிக்கும் இளைஞன், அந்தக் கனவை அடைந்தானா இல்லையா என்பதை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்த சூழலில், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன

 

அடுத்ததாக நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலனுடன் கவின் இணைந்துள்ளார். இதனை நெல்சனின் filament நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. வழக்கம்போல நெல்சன் வீடியோ வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். அதில், இயக்குனர் சிவபாலன், நடிகர் கவின், நகைச்சுவை நடிகர் ரெடின் ஆகியோர் வந்து அசத்தியுள்ளனர். படத்திற்கு ப்ளடி பெக்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிச்சைக்காரன் கெட்டப்பில் கவின் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் குபேரா பட போஸ்டரில், தனுஷும் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்