தாராபுரத்தில் நேற்று தவெக சார்பில் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா, ஒரு பெண் என்றும் பாராமல் என்னை மிகவும் கேவலமாக பேசுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று கதறி அழுது கண்ணீர் விட்டார்.
இதையடுத்து அருகில் நின்றிருந்த விஜய், அவர் தோள்களை ஆதரவாக பிடித்து அவரை சமாதானம் செய்தார். இந்த வீடியோ காட்சி நேற்று இணையத்தில் வைரலானது. இப்படி ஒரு காட்சியை தமிழ் சினிமாவில் கூட பார்க்க முடியாது. உலகமகா நடிப்புடா சாமி என்று கவுண்டமணி சத்யராஜிடம் பேசும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பலரும் கலாய்த்தனர்.
மேலும் அத்தனையும் நடிப்பா கோபால் என்று புதிய பறவை படத்தில் வரும் காட்சியை கிண்டல் செய்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் – பெண் வேடமிட்ட விவேக் பேசிய திரைப்பட காட்சியை பதிவிட்டும் பலரும் கிண்டல் செய்தனர். பாசமலர் சிவாஜி – சாவித்திரியை ஓவர்டேக் எடுத்துட்டாங்களே என்றும் பலர் ரீல்ஸ் வெளியிட்டனர்.
எங்கடா இப்படி நடிக்க கத்துக்கிட்டீங்க, இதை எல்லாம் பார்க்க சகிக்காம தாண்டா சிவாஜி போய் சேர்ந்துட்டாரு என்று வடிவேக் பேசிய ஒரு டயலாக்தை போட்டு விஜய் அருகில் சத்யபாமா அழுத காட்சியை நெட்டிசன்கள் விளாசித் தள்ளியுள்ளனர். இப்படி பல விதங்களில் நேற்று விஜய் – சத்யபாமா காட்சி இணையத்தில் பயங்கரமாக கலாய்த்து தள்ளப்பட்டது.
மேலும் சிவகாசி படத்தில் தனது தங்கையை மேடையில் அழ வைத்து அதன்மூலம் விஜய் ஓட்டு சேகரிக்கும் ஒரு காட்சியை பதிவிட்டும் சினிமாவில் வந்த சீனை அப்படியே நிஜத்துல எங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்களே என்றும் பலர் கமெண்ட் செய்திருந்தனர். இப்படி பல விதங்களில் நேற்றைய இந்த சம்பவம் இணையத்தில் வைரலானது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பிறகு, தவெக கட்சிக்கு தாவிய சத்யபாமா, என்னதான் நடித்து குவித்தாலும் தாராபுரம் தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள். சட்டசபை தேர்தலின் போதே தவெகவை புறக்கணித்த அவர்கள், 2வது முறையும் தவெகவை நிச்சயமாக ஆதரிக்க மாட்டார்கள். மதுராந்தகம், தாராபுரம் என 2 தொகுதிகளிலும் தவெக இடைத்தேர்தலில் தோல்வி உறுதி செய்யப்பட்டது என்று நெட்டிசன்கள் தொடர்ந்து வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.





