- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் அதே கெட்டப்பில் இந்த நடிகரா - ஏம்பா ரசிகர்களுக்கு போர் அடிச்சுடாதா?

மீண்டும் அதே கெட்டப்பில் இந்த நடிகரா – ஏம்பா ரசிகர்களுக்கு போர் அடிச்சுடாதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில், நடிகர்கள் பல்வேறு கெட்டப்களில் நடித்தாலும், சில கெட்டப்புகள் மிக அழகாக பொருந்திவிடும். குறிப்பாக விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்களுக்கு போலீஸ் கெட்டப், கச்சிதமாக பொருந்தும். சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களுக்கு கிராமத்து கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்தும்.

துணை நடிகர்களில் சிலர் கூட, குறிப்பிட்ட கேரக்டர்களில் நடிப்பதும் இதனால்தான். குடிபோதை ஆசாமி வேடம் என்றால் மயில்சாமியும், டபுள் மீனிங் பேசும் வயதான கேரக்டர் என்றால், வெண்ணிற ஆடை மூர்த்தியும், பேய் படங்களில் பயப்படும் கேரக்டர் என்றால் கோவை சரளாவும் இடம்பெற்று விடுகின்றனர்.

அதுபோல், சமீபத்திய நடிகர்களில் போலீஸ் கெட்டப் நடிகர் சூரிக்கு இயல்பாக பொருந்தி விடுகிறது. அவர் துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக நடித்த குள்ளநரிக்கூட்டம் படத்திலேயே, போலீஸ் கெட்டப் சிறப்பாக இருந்தது. சில காட்சிகள் என்றால், அது அவரது ஒல்லியான உடல்வாகு அதற்கு ஏற்றவாறு இருந்தது.

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய விடுதலை படத்திலும், போலீஸ் கான்ஸ்டபிளாகவே குமரேசன் கேரக்டரில் சூரி நடித்திருந்தார். படம் முழுக்க போலீஸ் ஜீப் ஓட்டும் ரோலில், அவரது போலீஸ் தோற்றம் நிஜ போலீஸ்காரரை பார்ப்பது போன்ற ஒரு பிரமிப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. அடுத்து வரும் விடுதலை 2 படத்திலும், அவர் அதே போலீஸ் கெட்டப்பில் தான் வர உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில், சூரி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, சசிக்குமார் நடிக்கும் இந்த படத்தில் உன்னி மணிகண்டன் என்ற மலையாள நடிகர் ஒருவரும் அறிமுகமாகிறார். சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடித்த 1947 படத்தில் நடித்த ரேவதி சர்மா, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தேனி, பெரியகுளம் பகுதிகளில் இப்போது நடந்து வருகிறது. இதற்காக பெரிய போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டு, ஜரூராக ஷூட்டிங் நடக்கிறது. இந்த படத்திலும் சூரிக்கு போலீஸ் வேடம் என்று தெரிய வந்துள்ளது.

சற்று முன்