- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகம்… கதாநாயகி யார் தெரியுமா? போடு வெடிய… முதல்...

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகம்… கதாநாயகி யார் தெரியுமா? போடு வெடிய… முதல் படமே வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கலை வாரிசாக இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜித் இயக்குனராக இல்லாமல் இப்போது கதாநாயகனாக தமிழ் சினிமா களத்தில் இறங்குகிறார்.

ஏற்கனவே இயக்குனர்கள் மகன்கள் தமிழ் சினிமா களத்தில் இறங்கி பெரிய அளவில் ஜெயித்திருக்கின்றனர். உதாரணமாக எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய் கஸ்தூரி ராஜா மகன்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் பி வாசு மகன் சக்தி போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மாவீரன் நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் அதிதி ஷங்கர் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவரது தம்பி அர்ஜித் இப்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிசெய்த சிவா என்பவர்தான் டைரக்ட் செய்கிறார்.

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் 15 படங்களை மட்டுமே தந்திருக்கிறார். இதில் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்கள் மட்டுமே தோல்வியை சந்தித்த நிலையில் மற்ற 13 படங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன.

- Advertisement -

குறிப்பாக இந்தியன் அந்நியன் முதல்வன் ஜெண்டில்மேன் காதலன் சிவாஜி எந்திரன் ரோபோ 2.0 நண்பன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இப்போது இந்தியன் 3 படத்தை முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து வேள்பாரி படத்தையும் அவர் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்க உள்ள புதிய படத்தில் அறிமுக நாயகனான அவருக்கு ஜோடியாக நடிப்பது பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ என்பது உறுதியாகி விட்டது. தமிழ் சினிமாவில் மிகவும் வரவேற்பை பெற்ற தமிழ் இளம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகையாக அவர் இருப்பதால் ஷங்கர் மகனுக்கு ஜோடியாக அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்துள்ளனர். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்