தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல படங்களுக்கு இசையமைத்த நிலையில் அனிருத் இப்போது முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி படங்களிலும் அனிருத் இசையமைத்து வரும் நிலையில், அனிருத்து இசைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது ஜெயிலர் 2 கூலி ஜனநாயகன் மதராஸி லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அனிருத்துக்கு 34 வயதான நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவ்வப்போது சில நட்சத்திர நடிகைகள் மற்றும் பாடகிகளுடன் அனிருத் காதல் வயப்பட்டு இருப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் தகவல் தீயாக பரவும்.
ஆனால் சில தினங்களில் அது உண்மையல்ல; வெறும் வதந்தி என்பது தெரிய வரும். இப்போது கடந்த சில தினங்களாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் என்றும் இணையத்தில் வேகமாக தகவல் பரவி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் அணியில் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ள காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் ஏற்பட்ட நட்பு காதலாகி மாறிவிட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் இதுகுறித்து ரஜினிகாந்த், கலாநிதி மாறனிடம் இதுகுறித்து பேசிவிட்டதாகவும் தகவல் பரவிய நிலையில் இதற்கு அனிருத் பதில் தந்திருக்கிறார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அனிருத் செய்துள்ள பதிவில், திருமணமா… அமைதியாக இருங்கள் நண்பர்களே… வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று அந்த பதிவில் அனிருத் கூறியிருக்கிறார். இதன்மூலம் தன்னை பற்றிய திருமண வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்படியே திருமணம் வதந்திகளாக வருகிறதே, அனிருத் திருமணம் தான் எப்போது நிஜத்தில் நடக்கும் என்று அனிருத் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





