தமிழ் சினிமாவில் இப்போது ரி ரிலீஸ் காலமாக இருந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்து வருகிறது. கேப்டன் பிரபாகரன் உள்ளத்தை அள்ளித்தா காதலுக்கு மரியாதை பஞ்சதந்திரம் ஆட்டோகிராப் என பல படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
நடிகர் விஜய் நடித்த படங்கள் என்றாலே ரசிகர்கள் கொண்டாடி விடுகின்றனர். அதிலும் அவர் நடித்த சில படங்கள் மாஸ் ஹிட் படங்களாக எவர் கிரீன் மூவீயாக இருக்கின்றன. அந்த வகையில் கில்லி படம் கடந்தாண்டில் வெளியாகி 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.
இப்போது நடிகர் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தில் வடிவேலு ரகுவரன் தாடி பாலாஜி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மென்மையான காதல் கதையாக இது இருந்தது.
சச்சின் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்ட 3 நாட்களில் இதுவரை ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கல்லுாரி மாணவ மாணவியர் மற்றும் இளம் வயதினர் இந்த படத்தை தியேட்டர்களில் காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலுமு் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டில்தான் ரிலீஸ் என்பதால் விஜய் ரசிகர்களும் இந்த படத்தை காண ஆர்வம் காட்டுகின்றனர்.
கில்லி சச்சின் படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் நடித்த தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படம் கடந்த 2026ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சமந்தா எமி ஜாக்சன் ராதிகா சரத்குமார் பிரபு மொட்டை ராஜேந்திரன் வில்லனாக இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடிகர் விஜயின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். தெறி படத்தை அடுத்த ஆண்டு 2026ல் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ் தாணு அறிவித்துள்ளார். இது தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதற்கு முன்பாக வருகிற 2026 ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





