கௌதம் மேனன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முதலாவதாக சூர்யா தான் இருப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவர் படத்தில் இருந்து வெளியேற, விக்ரம் அந்த கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.
சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். கொரோனாவுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நிதிச்சுமை காரணமாக இப்போது வரை வெளியாகவில்லை. கடும் பொருளாதார நிதியில் சிக்கித் தவித்த கௌதம் மேனனும் இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் தொடங்கி ஏராளமான படங்களில் அவரை பார்க்க முடிந்தது. கடைசியாக லியோ திரைப்படத்தில் கூட அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று உறுதியாக இருப்பதாக கூறினார். மீண்டும் இயக்கத்திலேயே தான் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கௌதம் மேனன் மிகச் சரியான முடிவை எடுத்திருப்பதாக கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது துருவ நட்சத்திரம் திரைப்படத்தை எப்படியாவது திரையரங்குகளில் செய்ய வேண்டும் என்று போராடினார். இரண்டு முறை அதற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் படம் வெளியே வரவில்லை.
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதில் கௌதம் மேனன் காட்டும் அக்கறையில் பாதி கூட விக்ரம் செலுத்துவதில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, கௌதம் மேனன் அடுத்ததாக மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாள மொழியில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் மம்முட்டி இயக்குனர் கௌதமிடம் ஒரு புது உத்தரவை போட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நீங்கள் மட்டும் இந்த திரைப்படத்தில் இருந்தால் போதும், மற்றபடி தமிழில் இருந்து எந்த ஒரு உதவி இயக்குனர்களும் வேண்டாம் என்று மம்முட்டி மிகவும் கறாராக கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை பகிர்ந்திருக்கும் சினிமா விமர்சகர்கள், மம்முட்டியின் செயல் ஏற்புடையதாக இல்லை என்று கூறி வருகின்றனர்.





