- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் திரைப்படத்தின் மட்ட பாடலுக்கு முதலில் குத்தாட்டம் போட இருந்தது இந்த நடிகை தானாம்... போடு...

கோட் திரைப்படத்தின் மட்ட பாடலுக்கு முதலில் குத்தாட்டம் போட இருந்தது இந்த நடிகை தானாம்… போடு நெனச்சு பாக்கவே வெறி ஏறுதே

- Advertisement -

கோட் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்து விட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, மகன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை இங்கு பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

- Advertisement -

முதல் பாதி மிக நன்றாக இருந்ததாகவும், இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். எது எப்படியோ, படத்தின் வசூல் நினைத்தது போலவே அமைந்திருக்கிறது. நான்கு நாட்களில் அந்த திரைப்படம் 288 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

- Advertisement -

தற்போது வரை கோட் திரைப்படம், 400 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்று அனைவருமே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சினேகா கதாபாத்திரம் சில மணி நேரங்களை வந்தாலும் அது ரசிகர்களை ஈர்க்கும் வகையிலேயே அமைந்தது.

 

இதுபோல பிரபுதேவா பிரசாந்த் ஜெயராம் உள்ளிட்டோரும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள். படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலும் சரியாக ஒர்க் அவுட் ஆனது என்று கூறலாம். கிளைமாக்ஸ் காட்சியில் விஜயின் சிவகார்த்திகேயனும் பேசும் வசனங்கள் திரையரங்குகளில் அலப்பறையைக் கூட்டின.

 

அது மட்டுமல்லாமல் மட்ட பாடலுக்கு திரிஷா போட்ட குத்தாட்டமும் ரசிகர்களை குஷி போடச் செய்தது. மஞ்சள் சேலையை உடுத்திக்கொண்டு அவர் போட்ட ஆட்டம் இங்கு பலரையும் கிறங்கடித்தது. இந்த நிலையில் அந்தப் பாடலுக்கு முதலில் வெங்கட் பிரபு அணுகிய நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

 

மட்ட திரைப்படத்தில் ஆடவைப்பதற்கு பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவை தான் அணுகி இருக்கிறார் வெங்கட் பிரபு. குண்டூர் காரம் திரைப்படத்தில் அவர் போட்ட குத்தாட்டம் பெரிய அளவில் பேசப்பட்டதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் படத்தில் தனக்கு ரோல் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட மறுத்துவிட்டாராம். இதன் பிறகு தான் திரிஷா உள்ளே வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்