சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகையாக மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர் தான் நடிகை ஷாலினி. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் பேபி ஷாலினி. சங்கர் குரு ராஜா சின்ன ரோஜா ஆடிவெள்ளி என பல படங்களில் அவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அலைபாயுதே அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு பார்த்தேன் ரசித்தேன் என பல படங்களில் ஷாலினி நடித்தார்.
அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜீத்குமாருக்கும் ஷாலினிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பிறகு இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த விருது விழாவில் நடிகை ஷாலினி பங்கேற்றார். அப்போது மேடையேறிய நடிகை ஷாலினி பேசியதாவது, இதுவரை என்னுடைய பிள்ளைகள் நான் நடித்த எந்த ஒரு படத்தையும் முழுமையாக பார்த்தது கிடையாது. இந்த மேடையை ஒரு சிறிய கோரிக்கைக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.
தயவு செய்து நான் நடித்த என்னுடைய படங்களில் ஒன்றையாவது முழுமையாக பாருங்கள். என்னுடைய மகள் அனோஷ்கா சமீபத்தில் தனது பிரண்ட்ஸ் மூலமாக அலைபாயுதே படம் குறித்து அறிந்திருக்கிறார். என்னுடன் சேர்ந்து அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் அது கூட இன்று வரை நடக்கவில்லை என்று நடிகை ஷாலினி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். நடிகை குஷ்பு ஒருமுறை ஒரு நேர்காணலில் பேசுகையில், நான் நடித்த படங்களை என் இரண்டு மகள்களும் பார்த்ததே கிடையாது. நான் நடிகை என்பதே அவர்களுக்கு தெரியாது என்று கூறியிருந்தாா். இப்போது நடிகை ஷாலினியும் என் படங்களை என் பிள்ளைகள் பார்ப்பதில்லை என்று கூறுவது ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை தந்துள்ளது.





