- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஷ்ணு விஷால் தம்பி ஹீரோவாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படம்… நாளை ரிலீஸ்...

நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ஹீரோவாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படம்… நாளை ரிலீஸ் – படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… எல்லாமே வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவரது தம்பி ருத்ரா நடித்த ஓஹோ எந்தன் பேபி என்ற படம் நாளை ரிலீஸாகிறது. இந்த படத்தில் அவரது தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை ரிலீஸ் ஆக உள்ள ஓஹோ எந்தன் பேபி படத்தில் ஹீரோவின் சித்தப்பாவாக காமெடி நடிகர் கருணாகரன் நடித்திருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு என்ற படத்தில் அறிமுகமானவர் கருணாகரன். அவர் தமிழ் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் கருணாகரன், கதாநாயகன் ருத்ராவின் சித்தப்பா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ஏற்கனவே பல படங்களில் நடித்தவர். குறிப்பாக திருடா திருடி படத்தில் தனுஷின் அண்ணனாக கிருஷ்ணா நடித்திருந்தார். மேலும் பிரபல விஞ்ஞானி கோவையைச் சேர்ந்த ஜிடி நாயுடு வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் படம் ஜிடிஎன். இந்த படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஜிடி நாயுடுவாக இந்த படத்தில் நடிப்பவர் நடிகர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் குறி சொல்கிற கேரக்டரில் வருகிறார். தம்பி ருத்ரா அறிமுகமாகும் படம் என்பதால், ஓஹோ எந்தன் பேபி படத்தில் அண்ணன் நடிகர் விஷ்ணு விஷாலும் நடித்திருக்கிறார். கதைப்படி அவர் சினிமா கதாநாயகனாகவே படத்தில் வருகிறார். அவரது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட சில டச்சிங் டயலாக்கும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஹீரோ விஷ்ணு விஷாலின் மேனேஜராக நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் ஹீரோவின் அப்பாவாக விஜய சாரதியும் அம்மாவாக கஸ்தூரியும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர் கேரக்டரில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார். இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அந்த காட்சியில் சினிமா தயாரிப்பாளராக நடித்திருப்பவர் ஹீரோவின் நிஜ அப்பா. அவரும் ஒரு காலத்தில் நடிகராக இருந்தவர். சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் மணிரத்னம் இயக்கத்தில் சுசி கணேசன் டைரக்ட் செய்த பைவ் ஸ்டார் படத்தில் நடித்து அறிமுகமானவர். பல விளம்பர படங்களை டைரக்ட் செய்த நிலையில் அவர் ஓஹோ எந்தன் பேபி படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்