- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்ப என்ன பண்ணுவீங்க, இப்ப என்ன பண்ணுவீங்க, விழித்துக்கொண்ட லியோ படத்தயாரிப்பு நிறுவனம் - விஜய்...

இப்ப என்ன பண்ணுவீங்க, இப்ப என்ன பண்ணுவீங்க, விழித்துக்கொண்ட லியோ படத்தயாரிப்பு நிறுவனம் – விஜய் பட விழாக்களுக்கு இனி சிக்கல் இருக்காது

- Advertisement -

லியோ படத்தின் வெற்றிவிழா, நாளை (நவம்பர் 1ம் தேதி), சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் மற்றும் படத்தில் நடித்த திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில், லியோ படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு படத்தின் கதாநாயகன், இயக்குநர் ஷீல்டு வழங்கி கவுரவிக்க வேண்டும். அதுதான் வெற்றி விழாவின் முக்கிய செயலாகும். தவிர, படத்தில் நடித்தவர்களுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்க வேண்டும். ஆனால், 950 தியேட்டர்களில் லியோ திரையிட்ட நிலையில், அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஷீல்டு தருவது சாத்தியமானதா எனத் தெரியவில்லை.

- Advertisement -

லியோ இசை வெளியீட்டு விழாவில், என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ, அதையே லியோ படம் ரிலீஸ்க்கு பின் நடக்கும் ஒரு விழாவாக மாற்றியே, நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குநருக்கு கார், நடிகருக்கு கார் என்ற ஆரவாரம் எல்லாம் இல்லாமல், வெற்றிக்கு உதவியவர்களுக்கு, ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு விழாவாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த முறை லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு, போலீசார் அனுமதி மறுக்க காரணம், ரசிகர்களே என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 3 பேர் முக்கிய நிர்வாகிகள் வீதம், 5 ஆயிரம் பேர் வரை, விழாவுக்கு அழைக்க திட்டமிடப்பட்டு, அதற்காஜ டிக்கெட்டுகளை அனுப்பி உள்ளனர்.

- Advertisement -

ஆனால், அவர்கள் அந்த டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றும், ஒரு தரப்பினர் அதே போல் போலி டிக்கெட் அச்சடித்தும் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்தனர். அதனால், 6 ஆயிரம் பேர் பங்கேற்க விழாவுக்கு, 60 ஆயிரம் பேர் வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததால், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இது, பலரையும் ஏமாற்றத்தில் தள்ளியது.

அதனால் இந்த முறை உஷாராக விழித்துக்கொண்ட லியோ படத் தயாரிப்பு நிறுவனம், ஆன்லைனில் இவ்விழாவுக்கான டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் மட்டுமே விழாவில் கலந்துக்கொள்ள முடியும். அதனால், முறைகேடு குளறுபடி நடக்க வாய்ப்பே இல்லை. இதையே, இனி விஜய் பங்கேற்கும் பட விழாக்களுக்கு பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்