லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் அன்னபூரணி. இது அவரது 75வது படம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றியை பெறவில்லை. அதே நேரத்தில் இந்தியில் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ஜவான் படம் பெரிய அளவில் வசூலை குவித்தது.
ஆனால், நயன்தாராவுக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கவில்லை. அதன் பிறகு இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வரவில்லை. தற்போது நயன்தாரா, மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதற்கிடையே சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, நிறைய பிசினஸ்களிலும் அழகு சாதகப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நாப்கின் விற்பனை போன்ற பிசினஸ்களிலும் நடிகை நயன்தாரா தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தனது வீட்டின் மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை அவர் திறந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.
நடிகை நயன்தாராவுக்கு உலகம், உயிர் என்ற உலகம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான 6 மாதங்களில், வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தைகள் இவர்கள். தன் பிள்ளைகள் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து, அவர்களை அன்புடன் அரவணைத்து பாதுகாத்து வளர்த்து வருகிறார் நயன்தாரா.
அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தைகளுடன் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி வெளியிடுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட பல நாட்கள், குழந்தைகளுடன் தான் வருகிறார் நயன்தாரா. இன்ஸ்டாகிராம் துவங்கி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில், 8 மில்லியன் ரசிகர்கள் நயன்தாராவை ரசிகர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு, நயன்தாராவின் சமூக வலைதள பக்கங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தன் குழந்தைகளுடன் ஆட்டோவில் பயணித்திருக்கிறார் நயன்தாரா. ஆட்டோவுக்குள் குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு இந்த வேண்டாத வேலை, பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த சாகசமெல்லாம் தேவைதானா என்று ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.






