தமிழக முதல்வராக பொறுப்பேற்று 4 மாதங்களே கடந்த நிலையில் கடுமையான விமர்சனங்களை விஜய் சந்தித்து வருகிறார். விஜய் குறித்தும் தவெக ஆட்சி குறித்தும் பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பலரும் அதிருப்தி விரக்தி தெரிவிப்பது மட்டுமின்றி கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர்.
இதுவரை திமுக அதிமுக கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இப்படி ஒரு மோசமான எதிர்ப்பலையை திமுக அல்லது அதிமுக என்ற 2 கட்சிகளின் முதல்வர்களுமே சந்தித்தது இல்லை. ஒருமுறை திமுக மறுமுறை அதிமுக இந்த முறை திமுக அடுத்த அதிமுக என்றுதான் மக்கள் மாற்றி மாறி ஓட்டுப் போட்டு ஆதரவு அளித்து வந்தனர்.
ஆனால் இந்த முறை தான் புதிதாக அரசியல் களத்துக்கு வந்த விஜய்க்கு விசில் சின்னத்தில் ஓட்டுப் போட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். திமுக அதிமுக மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும் விஜய் மீது இருந்த சினிமா கவர்ச்சியும் அவரது பஞ்ச் டயலாக்குகளும் ஒரு தரப்பு மக்களுக்கு பெரிய நம்பிக்கை அளித்தது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ரீல்ஸ் ரீல்ஸ் என்று நடிகர் விஜயை தமிழகத்தையே காக்க வந்த ஒருவர் போல சித்தரிக்கப்பட்ட நிலையில் மக்களும் அதை முழுதாக நம்பி ஆதரவு தந்தனர். ஆனால் ஆட்சி பொறுப்புக்கு தவெக வந்த இந்த 4 மாதங்களில் முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் தவெக அரசின் நிர்வாகமும் கடும் ஏமாற்றத்தை தந்துவிட்டது.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் மணிக்கணக்கில் இரவு பகல் நேரங்களில் மின்தடை அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பண்டங்களின் விலை உயர்வு சட்டம் ஒழுங்கு பாதிப்பு கொலை பாலியல் வன்முறை சம்பவங்கள் என்று மக்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் விஜய், எப்போது மேடை ஏறினாலும் சட்டசபையில் பேசினாலும் திமுக திமுக திமுக என்றும் ஸ்டாலின் ஸ்டாலின் என்றும் அவர்களை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இதைக் கேட்டு கேட்டு சலித்துப் போன மக்கள், எப்பவும் திமுக புராணம் பாடும் விஜயை ரீல்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். பனையூரில் இரவு முழுவதும் திமுக திமுக ஸ்டாலின் ஸ்டாலின் என விஜய் படித்து மனப்பாடம் செய்வது போலவும், காதல் படத்தில் இறுதி காட்சியில் வரும் பரத் போலவும் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு மாண்புக்குரிய தமிழக முதல்வரை இந்தளவுக்கு ரீல்ஸ் போட்டு மக்களை கிண்டல் செய்வது இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது. அன்று ரீல்ஸ் போட்டு மக்களை கவர்ந்த விஜய், இன்று மோசமான ஆட்சியை தந்து வருவதால் ரீல்ஸ் போட்டு மக்களே கலாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.





