- Advertisement -
Homeபொழுதுபோக்குகிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை அதிக விலை கொடுத்த வாங்கிய ஓடிடி உரிமம் பெற்ற நிறுவனம்...

கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை அதிக விலை கொடுத்த வாங்கிய ஓடிடி உரிமம் பெற்ற நிறுவனம் குறித்த தகவல் – போடு வெடிய, விஜய் ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. இந்த மாத இறுதிக்குள் மீதி 10 சதவீத ஷூட்டிங்கையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழு ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறது. அங்கு மீதிப் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க உள்ளது.

வழக்கமாக ஷூட்டிங் லொகேஷன் பார்க்க படத்தின் இயக்குநர், கேமராமேன் ஆகியோர்தான் செல்வது வழக்கம். ஆனால் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங்கில் டைரக்டர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழு பயங்கர பிஸியாக இருந்ததால், இந்த படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே, ரஷ்யாவுக்கு நேரில் சென்று லோகேஷன் பார்த்துவிட்டு திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன் இலங்கையில்தான் கிளைமேக்ஸ் மற்றும் இறுதிகட்ட முக்கிய காட்சிகளை படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. இதற்காக படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு இலங்கைக்கு சென்று ஒரு வாரம் அங்கு முகாமிட்டு பல இடங்களை பார்த்துவிட்டு வந்தார். அதனால் இலங்கையில்தான் ஷூட்டிங் நடத்தலாம் என படக்குழுவினர் காத்திருந்தனர்.

ஆனால் இலங்கைக்கு சென்றால் அங்குள்ள முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே குடும்பத்தினர், விஜயை சந்திக்க இருப்பதாகவும் அதனால் அரசியல் துவங்கியிருக்கும் விஜய்க்கு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கலாம் என்று தெரிய வந்ததாலும், இலங்கையில் ஷூட்டிங் வேண்டாம், ரத்து செய்து விடுங்கள் என்று விஜயே, நேரடியாக கூறிவிட்டார்.

- Advertisement -

இந்த மாத இறுதிக்குள் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பை முடித்துவிடும் படக்குழு அடுத்த மாதத்தில் இருந்து போஸ்ட் புரடக்சன் பணிகளை துவக்க உள்ளது. இதில் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் மற்றும் டீ ஏஜிங் பணிகள் அதிகமாக இருப்பதால், லாஸ் ஏஞ்சலுக்கு படத்தை அனுப்பி அங்குள்ள அதிக தொழில்நுட்பங்களுடன் மிக நேர்த்தியாக படத்தை உருவாக்க இயக்குநர் வெங்கட்பிரபு ஆயத்தமாகி உள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15 அல்லது தீபாவளி பண்டிகை என்ற இரு தினங்களை குறி வைத்து, இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே படத்தை ஓடிடி தளத்தில் விற்பதற்கான உரிமம் குறித்து பல நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமத்தை அதிக விலை கொடுத்து விஜய் படத்தை பெற்று விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

- Advertisement -

சற்று முன்