- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடிச்ச கோட் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா, ஆளாளுக்கு வேண்டாமுன்னு சொன்னா அவங்க எங்க...

விஜய் நடிச்ச கோட் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா, ஆளாளுக்கு வேண்டாமுன்னு சொன்னா அவங்க எங்க தாம்பா போவாங்க – டென்சனில் தயாரிப்பாளர்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்). 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மார்ச் இறுதிக்குள் மீதி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வரும் ஜூன் 13ல் படத்தை ரிலீஸ் செய்ய, படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபு ஏற்கனவே மாநாடு என்ற படத்தை டைம் டிராவல் ஜானர் கதையாக தான் தந்தார். சூர்யா நடித்த 24 படமும் அதே மாதிரியான கதைதான். அயலான் பட இயக்குநர் ரவிக்குமாரின் முதல்படமான இன்று நேற்று நாளை படமும் இதே டைம் டிராவலர் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கோட் படமும் அதே வரிசையில் வருகிறது.

- Advertisement -

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கதைக்காக, கண்டென்டுக்கான இப்போதெல்லாம் படங்கள் ஓடுவதில்லை. ஹீரோவுக்காக படம் ஓடுகிறது. கதையை எதிர்பார்க்கிற ஆடியன்ஸ் இல்லாததால், ஹீரோ கிடைத்தால் போதும் என எதையோ படமாக எடுத்து விடுகிறார்கள் என குறிப்பிட்டார்.

அதே வரிசையில்தான் விஜய் நடித்த லியோ படம் இருந்தது. அதைத்தான் அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார். அந்த வகையில்தான், வெங்கட்பிரபுவின் கோட் படமும் இருக்குமா எனத் தெரியவில்லை. எப்படி இருப்பினும் வசூல் இலக்கே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இந்நிலையில், கோட் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் ஓடிடி தளத்தில் விற்க, ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்புக் குழு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் நிறுவனத்தை அணுகியுள்ளது. விஜய் படமா, வேண்டவே வேண்டாம். நாங்கள் 2024க்கான அனைத்து படங்களையும் வாங்கி விட்டோம் என்று மறுத்து விட்டனர்.

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தை அணுகிய போது, இந்த ஒரு படத்துக்கு கொடுக்கும் பெருந்தொகையில், நாங்கள் 10க்கும் மேற்பட்ட படங்களின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கி விடலாம். அதனால் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டனர். அடுத்து, பெரிய படங்களை வாங்குவது அமேசான் பிரைம் என்பதால், அங்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்படி ஓடிடி தளங்கள் மறுக்க காரணம். கோட் படத்தை ஏற்கனவே தென்னிந்தியாவுக்கு என விலை பேசி ரூ. 125 கோடிக்கு விற்ற நிலையில், ஓடிடி நிறுவனங்கள் விஜய் படத்தை வாங்க மறுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்