- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 23ம் தேதி நடக்கும் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாடு, இதில் விவிஐபியாக கலந்துக்கொள்ளப்...

வரும் 23ம் தேதி நடக்கும் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாடு, இதில் விவிஐபியாக கலந்துக்கொள்ளப் போற அரசியல் தலைவர் யார் தெரியுமா? – வேற லெவல் சம்பவம் பண்றாரே தளபதி…

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இன்று தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீசாகி உள்ளது. படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத்துவங்கி விட்டன. இதற்கிடையே நடிகர் விஜய் நடத்தப் போகும் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் முதல் மாநாடு குறித்த தகவல்களும் அப்டேட் ஆகி வருகின்றன.

நடிகர் விஜயை பொருத்தவரை சினிமாவில் நிறைய வெற்றிகளை பார்த்துவிட்டார். பல வசூல் சாதனைகளை செய்துவிட்டார். இப்போது வௌியாகி உள்ள தி கோட் படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ ரூ. 600 கோடி கடந்த நிலையில், இது ரூ. 1000 கோடி எட்டும் என்று கூறப்படுகிறது.

இந்தமுறை தி கோட் படத்தின் வெற்றியை காட்டிலும், வருகிற 23ம் தேதி நடத்த உள்ள அரசியல் மாநாடு குறித்துதான் விஜய் நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார். ஏறக்குறைய 160 ஏக்கர் பரப்பளவில் விஜய் இந்த மாநாட்டை நடத்துகிறார். 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்கள், வேன்கள் என 4 சக்கர வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் நிறுத்த பல ஏக்கர் பரப்பளவில் தனித்தனி இடங்களில் பார்க்கிங் வசதிகள், வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி வழித்தடங்கள், மாநாட்டு பந்தலுக்கு வர சிறப்பு வழித்தடங்கள், மாநாட்டுக்கு வரும் கட்சியினர், ரசிகர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள் விரிவாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பது விஜய் மட்டுமல்லாது, இன்னும் சில முக்கிய தலைவர்களை அவர் அழைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழக அரசியலில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்படலாம்.

தமிழக அரசியல் களத்தில் சீமான் தவிர யாரும் தட்டுப்படாத நிலையில் இந்திய அளவில் பெரிய அரசியல் தலைவரை களத்தில் இறக்கிவிட விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இந்த அரசியல் மாநாட்டில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராகுலிடம் விஜய் பேசி, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இன்னும் தவெக கட்சித் தலைமை இதை உறுதிப்படுத்தவில்லை.

சற்று முன்