- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி விலகியதால் பொங்கல் களத்தில் உடனே குதித்த விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் - ஜெயம் ரவி...

விடாமுயற்சி விலகியதால் பொங்கல் களத்தில் உடனே குதித்த விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் – ஜெயம் ரவி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த படம் விடாமுயற்சி. கடந்த பல மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் டீசர் வெளியானது. அப்போது பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்றும் அதில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 2023ம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியான பின்பு, 2 ஆண்டுகள் கழித்து அஜீத்குமார் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் விடாமுயற்சி படத்தை தல பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.

- Advertisement -

ஆனால் நேற்றிரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா, விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியிட இயலாது. ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது. இது ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய செய்தது. இப்போது ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நித்யாமேனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை படம், வருகிற 14ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த படைத்தலைவன் படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படமும் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்போது அந்த லிஸட்டில் படைத்தலைவன் காதலிக்க நேரமில்லை படங்களும் இணைந்து விட்டன.

அத்துடன் விடாமுயற்சி படம் விலகி கொண்டதால் வணங்கான் கேம் சேஞ்சர் காதலிக்க நேரமில்லை படைத்தலைவன் ஆகிய படங்களுடன் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்த டென் ஹவர்ஸ் படம் வெளியாகிறது. மேலும் மெட்ராஸ்காரன், தருணம் போன்ற படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விடாமுயற்சி படம் நிறைய தியேட்டர்களை எடுத்துக்கொள்ளும் என்பதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட இந்த படங்கள் பொங்கலுக்கே ரிலீஸ் ஆகின்றன.

- Advertisement -

சற்று முன்